திருமுறை 6 · 6.007 · 12

திருவீரட்டானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
அதிகை வீரட்டானம்
நாடு
நடுநாடு

1

செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந் தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும்நல்லூருந் தேவன் குடிமருகலும் நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக் கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே.
சொற்பிரிப்பு
செல்வப் புனல்கெடில வீரட் ட(ம்)மும் சிற்றேம மும்,பெருந்தண் குற்றா ல(ம்)மும்,தில்லைச்சிற் றம்பலமும், தென்கூ ட(ல்)லும், தென்ஆனைக் காவும்,சி ராப்பள் ளி(ய்)யும்,நல்லூரும், தேவன்கு டி,மரு க(ல்)லும், நல்லவர்கள் தொழுதுஏத்தும் நாரை யூரும்-கல்லலகு நெடும்புருவக் கபாலம்ஏந்திக் கட்டங்கத் தோடுஉறைவார் காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தீர்த்தப் புனற்கெடில வீரட்டமுந் திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும்ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன் இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்கார்த்தயங்கு சோலைக் கயிலாயமுங் கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே.
சொற்பிரிப்பு
தீர்த்தப் புனல்கெடில வீரட் ட(ம்)மும், திருக்கோவல் வீரட்டம், வெண்ணெய் நல்லூர்,ஆர்த்துஅருவி வீழ்சுனைநீர் அண்ணா மலை, அறையணி நல்லூரும், அரநெ றி(ய்)யும்,-ஏத்துமின்கள்! நீறுஏத்த நின்ற ஈசன்- இடைமருது, இன்னம்பர், ஏகம் ப(ம்)மும்,கார்த்தயங்கு சோலைக் கயிலா ய(ம்)மும்- கண்நுதலான் தன்னுடைய காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சிறையார் புனற்கெடில வீரட்டமுந் திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்துறையார் வனமுனிக ளேத்தநின்ற சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும்அறையார் புனலொழுகு காவிரிசூழ் ஐயாற் றமுதர் பழனம்நல்லகறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங் கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே.
சொற்பிரிப்பு
சிறைஆர் புனல்கெடில வீரட் ட(ம்)மும் திருப்பா திரிப்புலியூர், திருஆ மாத்தூர்,துறைஆர் வனமுனிகள் ஏத்த நின்ற சோற்றுத் துறை,துருத்தி நெய்த்தா னமும்,அறைஆர் புனல்ஒழுகு காவி ரீசூழ் ஐயாற்று அமுதர்– பழனம், நல்லம்,கறைஆர் பொழில்புடைசூழ் கானப் பேரும், கழுக்குன்றும் - தம்முடைய காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

திரையார் புனற்கெடில வீரட்டமுந் திருவாரூர் தேவூர் திருநெல்லிக்காஉரையார் தொழநின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்வரையா ரருவிசூழ் மாநதியும் மாகாளங் கேதாரம் மாமேருவுங்கரையார் புனலொழுகு காவிரிசூழ் கடம்பந் துறையுறைவார் காப்புக்களே.
சொற்பிரிப்பு
திரைஆர் புனல்கெடில வீரட் ட(ம்)மும், திருஆரூர், தேவூர், திருநெல் லிக்கா,உரையார் தொழநின்ற ஒற்றி யூரும், ஓத்தூரும், மாற்பேறும், மாந்து றையும்,வரைஆர் அருவிசூழ் மாந தி(ய்)யும், மாகாளம், கேதாரம், மாமே ருவும்-கரைஆர் புனல்ஒழுகு காவி ரீசூழ் கடம்பந் துறைஉறைவார் காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந் திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங்கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங் குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங் கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.
சொற்பிரிப்பு
செழுநீர்ப் - புனல்கெடில வீரட் டமும், திரிபுராந் தகம்,தென்ஆர் தேவீச் சு(ர்)ரம்,கொழுநீர் புடைசுழிக்கும் கோட்டுக்காவும், குடமூக்கும், கோகரணம், கோலக் காவும்,பழிநீர்மை இல்லாப் பனங்காட் டூரும், பனையூர், பயற்றூர், பராய்த்து றை(ய்)யும்,கழுநீர் மதுவிரியும் காளிங் க(ம்)மும் கணபதீச் சுரத்தார்தம் காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்றுபவ்வந் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம்மவ்வந் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே.
சொற்பிரிப்பு
தெய்வப் புனல்கெடில வீரட் டமும் செழுந்தண் பிடவூரும், சென்று நின்றுபவ்வம் திரியும் பருப்ப த(ம்)மும், பறியலூர், வீரட்டம், பாவ நாசம்,மவ்வம் திரையும் மணிமுத் தமும், மறைக்காடும், வாய்மூர், வலஞ்சு ழியும்,கவ்வை வரிவண்டு பண்ணே பாடும் கழிப்பாலை - தம்முடைய காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ் சீர்காழி வல்லந் திருவேட்டியும்உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர்விண்ணார் விடையான் விளமர்வெண்ணி மீயச்சூர் வீழி மிழலைமிக்ககண்ணார் நுதலார் கரபுரமுங் காபாலி யாரவர்தங் காப்புக்களே.
சொற்பிரிப்பு
தெண்நீர்ப் - புனல்கெடில வீரட் ட(ம்)மும், சீர்காழி, வல்லம், திருவேட் டி(ய்)யும்,உண்நீர்ஆர் ஏடகமும், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரண நல்லூர்,விண்ணார் விடையான் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழி மிழலை, மிக்ககண்ஆர் நுதலார் கரபு ரமும், காபாலி யார்அவர்தம் காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந் திண்டீச் சரமுந் திருப்புகலூர்எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச் சரமுநல் லேமங்கூடல்கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங் குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங் காரோணந் தம்முடைய காப்புக்களே.
சொற்பிரிப்பு
தெள்ளும் புனல்கெடில வீரட் ட(ம்)மும் திண்டீச் சுரமும், திருப்பு கலூர்,எள்ளும் படையான் இடைத்தா ன(ம்)மும், ஏயீச் சுரமும்,நல் ஏமம், கூடல்,கொள்ளும் இலயத்தார் கோடி காவும், குரங்கணில் முட்டமும், குறும்ப லாவும்,கள்அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் - தம்முடைய காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சீரார் புனற்கெடில வீரட்டமுந் திருக்காட்டுப் பள்ளி திருவெண்காடும்பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும் பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்காரார் கமழ்கொன்றைத் தாரார்க்கென்றுங் கடவூரில் வீரட்டங் காப்புக்களே.
சொற்பிரிப்பு
சீர்ஆர் புனல்கெடில வீரட் ட(ம்)மும், திருக்காட்டுப் பள்ளி, திருவெண் காடும்,பாரார் பரவும்சீர்ப் பைஞ்ஞீ லியும், பந்தணை நல்லூரும், பாசூர், நல்லம்,நீர்ஆர் நிறைவயல்சூழ் நின்றி யூரும், நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வா யிலும்,-கார்ஆர் கமழ்கொன்றைத் தாரார்க்கு என்றும்- கடவூரில் வீரட்டம் - காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சிந்தும் புனற்கெடில வீரட்டமுந் திருவாஞ் சியமுந் திருநள்ளாறும்அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும் ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்எந்தம் பெருமாற் கிடமாவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்கந்தங் கமழுங் கரவீரமுங் கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.
சொற்பிரிப்பு
சிந்தும் புனல்கெடில வீரட் ட(ம்)மும் திருவாஞ் சியமும், திருநள் ளாறும்,அம்தண் பொழில்புடைசூழ் அயோகந் தியும், ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட் டியும்,எந்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும், எந்தை தலைச்சங் காடும்,கந்தம் கமழும் கரவீ ர(ம்)மும் கடம்பூர்க் கரக்கோயில் - காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தேனார் புனற்கெடில வீரட்டமுந் திருச்செம்பொன் பள்ளிதிருப் பூவணமும்வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதிலுஞ்சை மாகாளம் வாரணாசிஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம் இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலைக்கானார் மயிலார் கருமாரியுங் கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.
சொற்பிரிப்பு
தேன்ஆர் புனல்கெடில வீரட் ட(ம்)மும், திருச்செம்பொன் பள்ளி, திருப்பூவ ணமும்,வானோர் வணங்கும் மணஞ்சே ரியும், மதில்உஞ்சை மாகாளம், வார ணாசி,ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச் சுரம், இலங்குஆர் பருப்பதத்தோடு, ஏண்ஆர் சோலைக்கான்ஆர் மயில்ஆர் கருமா ரியும்- கறைமிடற்றார் தம்முடைய காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

திருநீர்ப் புனற்கெடில வீரட்டமுந் திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்வருநீர் வளம்பெருகு மானிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்கருநீல வண்டரற்றுங் காளத்தியுங் கயிலாயந் தம்முடைய காப்புக்களே.
சொற்பிரிப்பு
திருநீர்ப் - புனல்கெடில வீரட் ட(ம்)மும் திருவளப்பூர், தெற்குஏறு சித்த வடம்,வருநீர் வளம்பெருகு மாநிரு ப(ம்)மும் மயிலாப்பில் மன்னினார், மன்னி ஏத்தும்பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற- பிரமபுரம், சுழியல், பெண்ணா கடம்,கருநீல வண்டுஅரற்றும் காளத் தியும், கயிலாயம் - தம்முடைய காப்புக் க(ள்)ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.