1
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி அருமறையான் சென்னிக் கணியாமடிசரவணத்தான் கைதொழுது சாரும்மடி சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடிபரவுவார் பாவம் பறைக்கும்மடி பதினெண் கணங்களும் பாடும்மடிதிரைவிரவு தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
சொற்பிரிப்பு
அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி; அருமறையான் சென்னிக்கு அணிஆம் அடி;சரவணத்தான் கைதொழுது சாரும் அடி; சார்ந்தார்கட்கு எல்லாம் சரண்ஆம் அடி;பரவுவார் பாவம் பறைக்கும் அடி; பதினெண் கணங்களும் பாடும் அடி;திரைவிரவு தென்கெடில நாடன் அடி; திருவீரட் டானத்துஎம் செல்வன் அடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.