1
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றிகொல்லார் மழுவாட் படையாய் போற்றி கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றிகல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி கற்றா ரிடும்பை களைவாய் போற்றிவில்லால் வியனரணம் எய்தாய் போற்றி வீரட்டங் காதல் விமலா போற்றி.
சொற்பிரிப்பு
எல்லாம் சிவன்என்ன நின்றாய், போற்றி! எரிசுடர்ஆய் நின்ற இறைவா, போற்றி!கொல்லார் மழுவாள் படையாய், போற்றி! கொல்லும் கூற்றுஒன்றை உதைத்தாய், போற்றி!கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி! கற்றார் இடும்பை களைவாய், போற்றி!வில்லால் வியன்அரணம் எய்தாய், போற்றி!- வீரட்டம் காதல் விமலா, போற்றி!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.