1
சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச் சடாமகுடத் திருத்துமே சாம வேதகந்தருவம் விரும்புமே கபால மேந்து கையனே மெய்யனே கனக மேனிப்பந்தணவு மெல்விரலாள் பாக னாமே பசுவேறு மேபரம யோகி யாமேஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
சொற்பிரிப்பு
சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே; சாம வேதக்-கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே; மெய்யனே; கனக மேனிப்பந்துஅணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசுஏறு மே;பரம யோகி ஆமே;ஐந்தலைய மாசுணம்கொண்டு அரைஆர்க் கு(ம்)மே;- அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.