1
வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப் பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானைஅறிதற் கரியசீ ரம்மான் றன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னைஎறிகெடிலத் தானை இறைவன் றன்னை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.
சொற்பிரிப்பு
வெறிவிரவு கூவிளநல் – தொங்க லானை, வீரட்டத் தானை,வெள் ஏற்றி னானைப்,பொறிஅரவி னானைப்,புள் ஊர்தி யானைப், பொன்நிறத்தி னானைப், புகழ்தக் கானை,அறிதற்கு அரியசீர் அம்மான் தன்னை, அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை,எறிகெடிலத் தானை, இறைவன் தன்னை,– ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த ஆறே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.