திருமுறை 5 · 5.098 · 10

உள்ளத்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பொது
நாடு
பொது

1

நீற லைத்ததோர் மேனி நிமிர்சடைஆற லைக்கநின் றாடும் அமுதினைத்தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
சொற்பிரிப்பு
நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடைஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினைத்;தேறலைத்; தெளியைத்; தெளி வாய்த்தது ஓர்ஊறலைக்; கண்டு கொண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடுந்தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச்சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர்எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
சொற்பிரிப்பு
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும்தந்தையைத், தழல் போல்வது ஓர் மேனியைச்,சிந்தையைத், தெளிவைத் தெளி வாய்த்தது ஓர்எந்தையைக், கண்டு கொண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவேவெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிநின்றுள்ளத் தில்லொளி யைக்கண்ட துள்ளமே.
சொற்பிரிப்பு
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவேவெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்,கள்ளத்தைக் கழிய மனம் ஒன்றி நின்றுஉள்ளத்தில், ஒளியைக் கண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அம்மா னையமு தின்னமு தேயென்றுதம்மா னைத்தத்து வத்தடி யார்தொழுஞ்செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள்எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
சொற்பிரிப்பு
அம்மானை, அமுதின் அமுதே! என்றுதம்மானைத், தத்துவத்து அடியார் தொழும்செம்மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள்எம்மானைக், கண்டு கொண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கூறே றும்முமை பாகமோர் பாலராய்ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்பாறே றுந்தலை யேந்திப் பலஇலம்ஏறேறு மெந்தையைக் கண்டதெ னுள்ளமே.
சொற்பிரிப்பு
கூறு ஏறும் உமை பாகம் ஓர் பாலராய்,ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர்,பாறு ஏறும் தலை ஏந்திப் பல இலம்ஏறு ஏறும் எந்தையைக் கண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார்தன்னெஞ் சந்தமக் குத்தாம் இலாதவர்வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லீரேஎன்னெஞ்சி லீசனைக் கண்டதெ னுள்ளமே.
சொற்பிரிப்பு
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்,தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்;வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே?என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வென்றா னைப்புல னைந்துமென் தீவினைகொன்றா னைக்குணத் தாலே வணங்கிடநன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
சொற்பிரிப்பு
வென்றானைப், புலன் ஐந்தும்; என் தீவினைகொன்றானைக் குணத்தாலே வணங்கிடநன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்ஒன்றானைக்; கண்டு கொண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மருவி னைமட நெஞ்சம் மனம்புகுங்குருவி னைக்குணத் தாலே வணங்கிடுந்திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்றஉருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
சொற்பிரிப்பு
மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும்குருவினைக், குணத்தாலே வணங்கிடும்திருவினைச், சிந்தையுள் சிவனாய் நின்றஉருவினைக், கண்டு கொண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தேச னைத்திரு மால்பிர மன்செயும்பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்றஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
சொற்பிரிப்பு
தேசனைத், திருமால் பிரமன் செயும்பூசனைப் புணரில் புணர்வு ஆயது ஓர்நேசனை, நெஞ்சினுள் நிறைவாய் நின்றஈசனைக், கண்டு கொண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வெறுத்தா னைம்புல னும்பிர மன்றலைஅறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்கறுத்தா னைக்கா லினில்விர லொன்றினால்ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
சொற்பிரிப்பு
வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலைஅறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக்கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால்ஒறுத்தானைக்; கண்டு கொண்டது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.