திருமுறை 5 · 5.097 · 30

சித்தத்தொகை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பொது
நாடு
பொது

1

சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்அந்தி வானிறத் தானணி யார்மதிமுந்திச் சூடிய முக்கண்ணி னானடிவந்திப் பாரவர் வானுல காள்வரே.
சொற்பிரிப்பு
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்அந்தி வான் நிறத்தான், அணி ஆர் மதிமுந்திச் சூடிய முக்கண்ணினான், அடிவந்திப்பார் அவர் வான்உலகு ஆள்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்கண்டிங் காரறி வாரறி வாரெலாம்வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே.
சொற்பிரிப்பு
அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர்உண்டு போலும், ஓர் ஒண்சுடர்; அச்சுடர்கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம்,வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆதி யாயவ னாரு மிலாதவன்போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்பாதி பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே.
சொற்பிரிப்பு
ஆதி ஆயவன் ஆரும் இலாதவன்,போது சேர் புனை நீள்முடிப் புண்ணியன்பாதி பெண் உரு ஆகிப், பரஞ்சுடர்ச்சோதியுள் சோதியாய் நின்ற சோதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர்பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்அட்ட மூர்த்தி யருளென் றடைவரே.
சொற்பிரிப்பு
இட்டது, இட்டது ஓர் ஏறு உகந்து ஏறிஊர்பட்டி துட்டங்கனாய்ப் பலி தேர்வது ஓர்கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர்,அட்ட மூர்த்தி அருள்! என்று அடைவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஈறில் கூறைய னாகி எரிந்தவெண்ணீறு பூசி நிலாமதி சூடிலும்வீறி லாதன செய்யினும் விண்ணவர்ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.
சொற்பிரிப்பு
ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்த வெண்-நீறு பூசி நிலாமதி சூடிலும்,வீறு இலாதன செய்யினும், விண்ணவர்,ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

உச்சி வெண்மதி சூடிலும் ஊனறாப்பச்சை வெண்டலை யேந்திப் பலஇலம்பிச்சை யேபுகு மாகிலும் வானவர்அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே.
சொற்பிரிப்பு
உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப்பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம்பிச்சையே புகும் ஆகிலும், வானவர்,அச்சம் தீர்த்து அருளாய்! என்று அடைவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர்பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகாகாரு லாங்கண்ட னேயுன் கழலடிசேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.
சொற்பிரிப்பு
ஊர் இலாய்! என்று, ஒன்றாக உரைப்பது ஓர்பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா!கார் உலாம் கண்டனே! உன் கழல் அடிசேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்சிந்திப் பாரவர் தீவினை தீருமால்வெந்த நீறுமெய் பூசிய வேதியன்அந்த மாவளப் பாரடைந் தார்களே.
சொற்பிரிப்பு
எந்தையே! எம்பிரானே! என உள்கிச்சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்;வெந்த நீறு மெய் பூசிய வேதியன்அந்தமா அளப்பார், அடைந்தார்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில்ஆனை யீருரி போர்த்தன லாடிலுந்தான வண்ணத்த னாகிலுந் தன்னையேவான நாடர் வணங்குவர் வைகலே.
சொற்பிரிப்பு
ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில்ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்;தான் அ(வ்) வண்ணத்தன் ஆகிலும்; தன்னையேவான நாடர் வணங்குவர், வைகலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்மெய்யன் மேதகு வெண்பொடிப் பூசியமைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.
சொற்பிரிப்பு
ஐயன், அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம்மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசியமைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்பைகொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்இருவ ராகிநின் றார்கட் கறிகிலான்அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல்பரவு வாரவர் பாவம் பறையுமே.
சொற்பிரிப்பு
ஒருவன் ஆகி நின்றான், இவ்உலகு எலாம்;இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்;அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர்கழல்பரவுவார் அவர் பாவம் பறையுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்நாத னேயரு ளாயென்று நாடொறுங்காதல் செய்து கருதப் படுமவர்பாத மேத்தப் பறையுநம் பாவமே.
சொற்பிரிப்பு
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்,நாதனே, அருளாய்! என்று நாள்தொறும்காதல் செய்து கருதப்படும் அவர்பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

ஔவ தன்மை யவரவ ராக்கையான்வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோமௌவல் நீண்மலர் மேலுறை வானொடுபௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே.
சொற்பிரிப்பு
ஔவ தன்மை அவர் அவர் ஆக்கையான்;வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ!மௌவல் நீள்மலர் மேல் உறைவானொடுபௌவ வண்ணனுமாய்ப் பணிவார்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல்புக்குப் பல்பலி தேரும் புராணனைநக்கு நீர்கள் நரகம் புகேன்மினோதொக்க வானவ ராற்றொழு வானையே.
சொற்பிரிப்பு
அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல்புக்கு, பல் பலி தேரும் புராணனைநக்கு, நீர்கள் நரகம் புகேன்மினோ!தொக்க வானவரால் தொழுவானையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்திங்கள் சூடிய தீநிற வண்ணனார்இங்க ணாரெழில் வானம் வணங்கவேஅங்க ணாற்கது வாலவன் தன்மையே.
சொற்பிரிப்பு
கங்கை தங்கிய செஞ்சடை மேல் இளந்-திங்கள் சூடிய தீ நிற வண்ணனார்;இங்கணார், எழில் வானம் வணங்கவே;அங்கணாற்கு அதுவால், அவன் தன்மையே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சேநுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்புகரில் சேவடி யேபுக லாகுமே.
சொற்பிரிப்பு
ஙகர வெல்கொடியானொடு நன்நெஞ்சே!நுகர, நீ உனைக் கொண்டு உயப் போக்குறில்,மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்புகர் இல் சேவடியே புகல் ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

சரண மாம்படி யார்பிற ரியாவரோகரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்மரண மெய்திய பின்னவை நீக்குவான்அரண மூவெயி லெய்தவ னல்லனே.
சொற்பிரிப்பு
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்தபின்,மரணம் எய்தியபின் நவை நீக்குவான்அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாஞ்சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.
சொற்பிரிப்பு
ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம்சிவன் என்பான்; செழுமான் மறிக் கையினான்;கவனம் செய்யும் கனவிடை ஊர்தியான்தமர் என்றாலும் கெடும், தடுமாற்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

இடப மேறியும் இல்பலி யேற்பவர்அடவி காதலித் தாடுவர் ஐந்தலைப்படவம் பாம்பரை யார்த்த பரமனைக்கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே.
சொற்பிரிப்பு
இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்;அடவி காதலித்து ஆடுவர்; ஐந்தலைப்பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனைக்,கடவிராய்ச் சென்று கைதொழுது உய்ம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

இணர்ந்து கொன்றைபொற் றாது சொரிந்திடும்புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்அணைந்த அஞ்சடை யானவன் பாதமேஉணர்ந்த உள்ளத் தவருணர் வார்களே.
சொற்பிரிப்பு
இணர்ந்து கொன்றை பொன் தாது சொரிந்திடும்,புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன்அணைந்த, அம் சடையான் அவன் பாதமேஉணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங்கருமந் தான்கரு மான்மறிக் கையினான்அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோசிரமஞ் சேரழல் தீவினை யாளரே.
சொற்பிரிப்பு
தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும்கருமந்தான் கருமான் மறிக் கையினான்;அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!சிரமம் சேர் அழல் தீவினை யாளரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

நமச்சி வாயவென் பாருள ரேலவர்தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்இமைத்து நிற்பது சால அரியதே.
சொற்பிரிப்பு
நமச்சிவாய என்பார் உளரேல், அவர்தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால்,அமைத்துக் கொண்டது ஓர் வாழ்க்கையன் ஆகிலும்,இமைத்து நிற்பது சால அரியதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினைவெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்புற்ப னிக்கெடு மாறது போலுமே.
சொற்பிரிப்பு
பல்பல் காலம் பயிற்றிப், பரமனைச்சொல் பல் காலம் நின்று, ஏத்துமின்! தொல்வினைவெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்ட அப்புல் பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினாற்பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே.
சொற்பிரிப்பு
மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்;கணிசெய் வேடத்தர் ஆயவர்; காப்பினால்பணிகள் தாம் செய வல்லவர் யாவர், தம்பிணிசெய் ஆக்கையை நீக்குவர்; பேயரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே.
சொற்பிரிப்பு
இயக்கர், கின்னரர் இந்திரன், தானவர்,நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்மயக்கம் எய்த, வல்மால் எரி ஆயினான்;வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

அரவ மார்த்தன லாடிய அண்ணலைப்பரவு வாரவர் பாவம் பறைதற்குக்குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்கரவில் நான்முக னுங்கரி யல்லரே.
சொற்பிரிப்பு
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்பரவுவார் அவர் பாவம் பறைதற்குக்,குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல்கரவு இல் நான்முகனும், கரி அல்லரே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான்தழலுந் தாமரை யானொடு தாவினான்கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.
சொற்பிரிப்பு
அழல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்றுஉழலும் மூ எயில் ஒள்அழல் ஊட்டினான்தழலும் தாமரையானொடு, தாவினான்,கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

இளமை கைவிட் டகறலும் மூப்பினார்வளமை போய்ப்பிணி யோடு வருதலால்உளமெ லாமொளி யாய்மதி ஆயினான்கிளமை யேகிளை யாக நினைப்பனே.
சொற்பிரிப்பு
இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார்,வளமை போய், பிணியோடு வருதலால்,உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான்கிளமையே கிளையாக நினைப்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

தன்னிற் றன்னை அறியுந் தலைமகன்தன்னிற் றன்னை அறியிற் றலைப்படுந்தன்னிற் றன்னை அறிவில னாயிடிற்தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.
சொற்பிரிப்பு
தன்னில் தன்னை அறியும் தலைமகன்தன்னில் தன்னை அறியில் தலைப்படும்;தன்னில் தன்னை அறிவு இலன் ஆயிடில்,தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன்றலங்க லோடுட னேசெல வூன்றியநலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்வலம்கொண் டேத்துவார் வானுல காள்வரே.
சொற்பிரிப்பு
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து பத்தும் அன்றுஅலங்கலோடு உடனே செல ஊன்றியநலங்கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும்வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.