திருமுறை 5 · 5.095 · 11

இலிங்கபுராணத்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பொது
நாடு
பொது

1

புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்சொக்க ணைந்த சுடரொளி வண்ணனைமிக்குக் காணலுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்;நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்;சொக்கு அணைந்த சுடர்ஒளி வண்ணனைமிக்குக் காணல் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர்திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர்உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச்செலவு காணலுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
அலரும் நீரும் கொண்டு ஆட்டித் தெளிந்திலர்;திலகம் மண்டலம் தீட்டித் திரிந்திலர்;உலக மூர்த்தி ஒளிநிற வண்ணனைச்செலவு காணல் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தைஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
ஆப்பி நீரோடு அலகுகைக் கொண்டிலர்;பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்;காப்புக் கொள்ளி கபாலி தன் வேடத்தைஓப்பிக் காணல் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர்பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனைமெய்யைக் காணலுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்;பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்;ஐயன், வெய்ய அழல்நிற வண்ணனைமெய்யைக் காணல் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர்பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர்தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலைநெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
எருக்கு அம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர்;பெருக்கக் கோவணம் பீறி உடுத்திலர்;தருக்கினால் சென்று தாழ்சடை அண்ணலைநெருக்கிக், காணல் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர்நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர்உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனைநிரம்பக் காணலுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
மரங்கள் ஏறி மலர்பறித்து இட்டிலர்;நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்;உரம் பொருந்தி ஒளிநிற வண்ணனைநிரம்பக் காணல் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர்அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர்சிட்டன் சேவடி சென்றெய்திக் காணியபட்ட கட்டமுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
கட்டுவாங்கம் கபாலம் கைக் கொண்டிலர்;அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர்;சிட்டன் சேவடி சென்று எய்திக் காணிய,பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வெந்த நீறு விளங்க அணிந்திலர்கந்த மாமலர் இண்டை புனைந்திலர்எந்தை ஏறுகந் தேறெரி வண்ணனைஅந்தங் காணலுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
வெந்த நீறு விளங்க அணிந்திலர்;கந்த மாமலர் இண்டை புனைந்திலர்;எந்தை, ஏறு உகந்து ஏறு எரி வண்ணனை,அந்தம் காணல் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்அளவு காணலுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
இள எழுந்த இருங்குவளைம் மலர்பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர்;களவு செய்தொழில் காமனைக் காய்ந்தவன்அளவு காணல் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர்விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே.
சொற்பிரிப்பு
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்;விண்ட வான்சங்கம் விம்ம வாய் வைத்திலர்;அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்கெண்டிக் காணல் உற்றார் அங்கு இருவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

செங்க ணானும் பிரமனுந் தம்முளேஎங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார்இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.
சொற்பிரிப்பு
செங்கணானும் பிரமனும் தம்முளேஎங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்;இங்குற்றேன்! என்று, இலிங்கத்தே தோன்றினான்பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.