திருமுறை 5 · 5.093 · 10

மறக்கிற்பனே என்னும்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பொது
நாடு
பொது

1

காச னைக்கன லைக்கதிர் மாமணித்தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள்மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம்ஈச னையினி நான்மறக் கிற்பனே.
சொற்பிரிப்பு
காசனைக், கனலைக், கதிர்மாமணித்தேசனைப், புகழார் சிலர் தெண்ணர்கள்;மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம்ஈசனை இனி நான் மறக்கிற்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

புந்திக் குவிளக் காய புராணனைச்சந்திக் கண்நட மாடுஞ் சதுரனைஅந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியைவந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே.
சொற்பிரிப்பு
புந்திக்கு விளக்கு ஆய புராணனைச்,சந்திக்கண் நடம் ஆடும் சதுரனை,அந்தி வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை,வந்து என் உள்ளம் கொண்டானை, மறப்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஈசன் ஈசனென் றென்றும் அரற்றுவன்ஈசன் றானென் மனத்திற் பிரிவிலன்ஈசன் றன்னையு மென்மனத் துக்கொண்டுஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.
சொற்பிரிப்பு
ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்;ஈசன் தான் என் மனத்தில் பிரிவிலன்;ஈசன் தன்னையும் என் மனத்துக்கொண்டு,ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஈசன் என்னை யறிந்த தறிந்தனன்ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால்ஈசன் சேவடி யேத்தப் பெற்றேனினிஈசன் றன்னையும் யான்மறக் கிற்பனே.
சொற்பிரிப்பு
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,-ஈசன் சேவடி ஏற்றப்பெறுதலால்,-ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன்; இனிஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றைவான வெண்மதி சூடிய மைந்தனைவேனி லானை மெலிவுசெய் தீயழல்ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.
சொற்பிரிப்பு
தேனைப், பாலினைத் திங்களை, ஞாயிற்றை,வான வெண்மதி சூடிய மைந்தனை,வேனிலானை மெலிவு செய் தீ அழல்ஞான மூர்த்தியை நான் மறக்கிற்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கன்ன லைக்கரும் பூறிய தேறலைமின்ன னைமின் னனைய வுருவனைப்பொன்ன னைமணிக் குன்று பிறங்கியஎன்ன னையினி யான்மறக் கிற்பனே.
சொற்பிரிப்பு
கன்னலைக், கரும்பு ஊறிய தேறலை,மின்னனை, மின் அனைய உருவனைப்,பொன்னனை, மணிக் குன்று பிறங்கியஎன்னனை, இனி யான் மறக்கிற்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச்சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியைஅரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர்விரும்பும் ஈசனை நான்மறக் கிற்பனே.
சொற்பிரிப்பு
கரும்பினைக், கட்டியைக், கந்த மாமலர்ச்சுரும்பினைச், சுடர்ச் சோதியுள் சோதியை,அரும்பினில் பெரும் போது கொண்டு, ஆய்மலர்விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியைநெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியைநஞ்சு கண்டத் தடக்கிய நம்பனைவஞ்ச னேனினி யான்மறக் கிற்பனே.
சொற்பிரிப்பு
துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை,நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை,நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை,வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

புதிய பூவினைப் புண்ணிய நாதனைநிதியை நீதியை நித்திலக் குன்றினைக்கதியைக் கண்டங் கறுத்த கடவுளைமதியை மைந்தனை நான்மறக் கிற்பனே.
சொற்பிரிப்பு
புதிய பூவினைப் புண்ணியநாதனை,நிதியை, நீதியை நித்திலக் குன்றினைக்,கதியைக், கண்டம் கறுத்த கடவுளை,மதியை, மைந்தனை நான் மறக்கிற்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கருகு கார்முகில் போல்வதொர் கண்டனைஉருவ நோக்கியை ஊழி முதல்வனைப்பருகு பாலனைப் பான்மதி சூடியைமருவு மைந்தனை நான்மறக் கிற்பனே.
சொற்பிரிப்பு
கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை,உருவம் நோக்கியை ஊழி முதல்வனைப்,பருகு பாலனைப் பால்மதி சூடியை,மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.