திருமுறை 5 · 5.090 · 10

தனி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பொது
நாடு
பொது

1

மாசில் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்மூசு வண்டறை பொய்கையும் போன்றதேஈசன் எந்தை இணையடி நீழலே.
சொற்பிரிப்பு
மாசு இல் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கு இள வேனிலும்மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதேஈசன், எந்தை இணைஅடி நீழலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்நமச்சி வாயவே நானறி விச்சையும்நமச்சி வாயவே நாநவின் றேத்துமேநமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
சொற்பிரிப்பு
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆளா காராளா னாரை அடைந்துய்யார்மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்தோளா தசுரை யோதொழும் பர்செவிவாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.
சொற்பிரிப்பு
ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து உய்யார்;மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;தோளாத சுரையோ தொழும்பர் செவி?வாளா மாய்ந்து மண் ஆகிக் கழிவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்சுடலை சேர்வது சொற்பிர மாணமேகடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.
சொற்பிரிப்பு
நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண்இலீர்?சுடலை சேர்வது சொல் பிரமாணமே;கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்,உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்ஆக்கைக் கேயிரை தேடி அலமந்துகாக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
சொற்பிரிப்பு
பூக்கைக் கொண்டு அரன் பொன்அடி போற்றிலார்;நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,காக்கைக்கே இரை ஆகிக், கழிவரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

குறிக ளுமடை யாளமுங் கோயிலும்நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்பொறியி லீர்மன மென்கொல் புகாததே.
சொற்பிரிப்பு
குறிகளும், அடையாளமும், கோயிலும்,நெறிகளும், அவர் நின்றது ஓர் நேர்மையும்,அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்,பொறி இலீர்! மனம் என்கொல், புகாததே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்சூழ்த்த மாமலர் தூவித் துதியாதேவீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
சொற்பிரிப்பு
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்,தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்சூழ்த்த மாமலர் தூவித் துதியாதேவீழ்த்தவா, வினையேன் நெடுங்காலமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.
சொற்பிரிப்பு
எழுது பாவை நல்லார் திறம் விட்டு, நான்,தொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்துகொண்டு,உழுத சால் வழியே உழுவான் பொருட்டுஇழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளேபுக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டுநக்கு நிற்ப ரவர்தம்மை நாணியே.
சொற்பிரிப்பு
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளேபுக்கு நிற்கும் பொன் ஆர்சடைப் புண்ணியன்,பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டுநக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான்முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
சொற்பிரிப்பு
விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.