திருமுறை 5 · 5.089 · 10

தனி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பொது
நாடு
பொது

1

ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்ஒன்று கீளுமை யோடு முடுத்ததுஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தேஒன்றி நின்றங் குறையும் ஒருவனே.
சொற்பிரிப்பு
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;ஒன்று கீள் உமையோடும் உடுத்ததுஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தேஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில்இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள்இரண்டு மில்லிள மானெமை யாளுகந்திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே.
சொற்பிரிப்பு
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன செய்தொழில்;இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன கோலங்கள்;இரண்டும் இல் இளமான்; எமை ஆள் உகந்து,இரண்டு போதும் என் சிந்தையுள் வைகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.
சொற்பிரிப்பு
மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில்மூன்றும் ஆயின மூஇலைச் சூலத்தன்;மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்;மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம்நாலு வேதஞ் சரித்தது நன்னெறிநாலு போலெம் அகத்துறை நாதனே.
சொற்பிரிப்பு
நாலின் மேல்முகம் செற்றதும்; மன்நிழல்நாலு நன்கு உணர்ந்திட்டதும்; இன்பம் ஆம்நாலு வேதம் சரித்ததும், நன்நெறிநாலு போல் எம் அகத்து உறை நாதனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசைஅஞ்சு போலரை யார்த்ததின் தத்துவம்அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன்அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே.
சொற்பிரிப்பு
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசைஅஞ்சு போல் அரவு ஆர்த்தது, இன் தத்துவம்அஞ்சும், அஞ்சும் ஓர் ஓர் அஞ்சும், ஆயவன்;அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்ஆறு சூடிய அண்ட முதல்வனார்ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள்ஆறு போலெம் அகத்துறை ஆதியே.
சொற்பிரிப்பு
ஆறு கால் வண்டு மூசிய கொன்றையான்;ஆறு சூடிய' அண்ட முதல்வனார்;ஆறு கூர்மையர்க்கு அச்சமயப்பொருள்ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல்ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.
சொற்பிரிப்பு
ஏழு மாமலை ஏழ்பொழில், சூழ் கடல்ஏழு போற்றும் இராவணன் கைந்நரம்புஏழு கேட்டு அருள் செய்தவன் பொன்கழல்,ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்எட்டு வான்குணத் தீசனெம் மான்றனைஎட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளேஎட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.
சொற்பிரிப்பு
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில்,எட்டு வான் குணத்து ஈசன் எம்மான் தனைஎட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே;எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஒன்ப தொன்பதி யானை யொளிகளிறொன்ப தொன்பது பல்கணஞ் சூழவேஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரைஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.
சொற்பிரிப்பு
ஒன்பது ஒன்பது யானை, ஒளிகளிறு;ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே,ஒன்பது ஆம் அவை தீத்தொழிலின் உரை;ஒன்பது ஒத்து நின்று என்னுள் ஒடுங்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்பத்து நூறவன் பல்சடை தோண்மிசைபத்தி யாமில மாதலின் ஞானத்தாற்பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.
சொற்பிரிப்பு
பத்து நூறவன் வெங்கண் வெள்ஏற்று அண்ணல்;பத்து நூறு, அவன் பல்சடை தோள்மிசை;பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்பத்தியான் இடம் கொண்டது பள்ளியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.