திருமுறை 5 · 5.088 · 10

திருமருகல்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
மருகல்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பெருக லாந்தவம் பேதைமை தீரலாந்திருக லாகிய சிந்தை திருத்தலாம்பருக லாம்பர மாயதோ ரானந்தம்மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
சொற்பிரிப்பு
பெருகலாம், தவம்; பேதைமை தீரலாம்;திருகலாகிய சிந்தை திருத்தலாம்;பருகலாம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்-மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய்நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிருவேடங் கைதொழ வீடெளி தாகுமே.
சொற்பிரிப்பு
பாடம் கொள் பனுவல் திறம் கற்றுப்போய்,நாடு அங்கு உள்ளன தட்டிய நாண்இலீர்!மாடம் சூழ் மருகல் பெருமான் திருவேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவைஅனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிகமனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம்நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே.
சொற்பிரிப்பு
சினத்தினால் வரும் செய்தொழில் ஆம் அவைஅனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய், மிகமனத்தினால் மருகல் பெருமான் திறம்நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஓது பைங்கிளிக் கொண்பால் அமுதூட்டிப்பாது காத்துப் பலபல கற்பித்துமாது தான்மரு கற்பெரு மானுக்குத்தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.
சொற்பிரிப்பு
ஓது பைங்கிளிக்கு ஒண்பால் அமுது ஊட்டிப்,பாதுகாத்துப் பலபல கற்பித்து,மாது தான், மருகல் பெருமானுக்குத்தூது சொல்ல விடத் தான் தொடங்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இன்ன வாறென்ப துண்டறி யேனின்றுதுன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்மன்னு தென்மரு கற்பெரு மான்றிறம்உன்னி யொண்கொடி உள்ள முருகுமே.
சொற்பிரிப்பு
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்றுதுன்னு கைவளைசோரக், கண் நீர் மல்கும்;மன்னு தென் மருகல் பெருமான் திறம்உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சங்கு சோரக் கலையுஞ் சரியவேமங்கை தான்மரு கற்பெரு மான்வரும்அங்க வீதி அருகணை யாநிற்கும்நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே.
சொற்பிரிப்பு
சங்கு சோரக் கலையும் சரியவே,மங்கை தான், மருகல் பெருமான் வரும்அங்க வீதி அருகு அணையாநிற்கும்;நங்கைமீர்; இதற்கு என் செய்கேன், நாளுமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

காட்சி பெற்றில ளாகிலுங் காதலேமீட்சி யொன்றறி யாது மிகுவதேமாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத்தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே.
சொற்பிரிப்பு
காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலேமீட்சி ஒன்று அறியாது மிகுவதே?மாட்சி ஆர் மருகல் பெருமானுக்குத்தாட்சி சால உண்டாகும்! என் தையலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்மாட நீண்மரு கற்பெரு மான்வரிற்கூடு நீயென்று கூட லிழைக்குமே.
சொற்பிரிப்பு
நீடு நெஞ்சுள்நினைந்து, கண் நீர் மல்கும்,ஓடும் மாலினோடு ஒண்கொடி மாதராள்,மாடம் நீள் மருகல்பெருமான் வரில்கூடு, நீ! என்று கூடல் இழைக்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கந்த வார்குழல் கட்டிலள் காரிகைஅந்தி மால்விடை யோடுமன் பாய்மிகவந்தி டாய்மரு கற்பெரு மானென்றுசிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.
சொற்பிரிப்பு
கந்த வார்குழல் கட்டிலள், காரிகைஅந்தி, மால்விடையோடும் அன்பு ஆய் மிக"வந்திடாய், மருகல் பெருமான்!”என்றுசிந்தை செய்து திகைத்திடும்; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஆதி மாமலை அன்றெடுத் தானிற்றுச்சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும்ஆதி யான்மரு கற்பெரு மான்றிறம்ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
சொற்பிரிப்பு
ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்றுச்,சோதி! என்றலும் தொல்அருள் செய்திடும்ஆதியான், மருகல் பெருமான், திறம்ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.