1
பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ்சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.
சொற்பிரிப்பு
பட்டம் நெற்றியர் பாய்புலித் தோலினர்;நட்டம் நின்று நவில்பவர் நாள்தோறும்சிட்டர் வாழ் திருவார் மணஞ்சேரி எம்வட்ட வார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.