திருமுறை 5 · 5.086 · 10

திருவாட்போக்கி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
வாட்போக்கி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கால பாசம் பிடித்தெழு தூதுவர்பால கர்விருத் தர்பழை யாரெனார்ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
சொற்பிரிப்பு
கால பாசம் பிடித்து எழு தூதுவர்,பாலகர், விருத்தர் பழையார் எனார்;ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார்சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்படுத்த போது பயனிலை பாவிகாள்அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியைஎடுத்து மேத்தியும் இன்புறு மின்களே.
சொற்பிரிப்பு
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்படுத்த போது பயன் இலை பாவிகாள்!அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியைஎடுத்தும், ஏத்தியும் இன்புறுமின்களே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்உந்தி யோடி நரகத் திடாமுனம்அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார்சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.
சொற்பிரிப்பு
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்உந்தி, ஓடி நரகத்து இடா முனம்,அந்தியின் ஒளி தாங்கும் வாட்போக்கியார்-சிந்தியாஎழுவார் வினை தீர்ப்பரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற்தேற்றம் வந்து தெளிவுற லாகுமேஆற்ற வுமருள் செய்யும்வாட் போக்கிபால்ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.
சொற்பிரிப்பு
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே?ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால்ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்வேறு வேறு படுப்பதன் முன்னமேஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க்கூறி யூறி உருகுமென் னுள்ளமே.
சொற்பிரிப்பு
மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர்வேறு வேறுபடுப்பதன் முன்னமே,ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்குஊறி ஊறி உருகும், என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கான மோடிக் கடிதெழு தூதுவர்தான மோடு தலைபிடி யாமுனம்ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார்ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.
சொற்பிரிப்பு
கானம் ஓடிக் கடிது எழு தூதுவர்தானமோடு தலை பிடியா முனம்,ஆன்அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார்,ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர்கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமேஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார்கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.
சொற்பிரிப்பு
பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர்கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே,ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நாடி வந்து நமன்தமர் நல்லிருள்கூடி வந்து குமைப்பதன் முன்னமேஆடல் பாடல் உகந்தவாட் போக்கியைவாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.
சொற்பிரிப்பு
நாடி வந்து நமன்தமர் நல்இருள்கூடி வந்து குமைப்பதன் முன்னமே,ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியைவாடி ஏத்த, நம் வாட்டம் தவிருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர்பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமேஅட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க்கிட்ட மாகி யிணையடி யேத்துமே.
சொற்பிரிப்பு
கட்டு அறுத்துக் கடிது எழு தூதுவர்பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே,அட்ட மாமலர் சூடும் வாட்போக்கியார்க்குஇட்டம் ஆகி இணைஅடி ஏத்துமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இரக்க முன்னறி யாதெழு தூதுவர்பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமேஅரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.
சொற்பிரிப்பு
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர்பரக்கழித்து, அவர் பற்றுதல் முன்னமே,அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார்கரப்பதும் கரப்பார், அவர் தங்கட்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.