திருமுறை 5 · 5.084 · 10

திருக்காட்டுப்பள்ளி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
மேலைத்திருக்காட்டுப்பள்ளி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிதுஓட்டுப் பள்ளிவிட் டோட லுறாமுனங்காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
சொற்பிரிப்பு
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்! இதுஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம்,காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளேநாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமேகாட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
சொற்பிரிப்பு
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளேநாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்!கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே,காட்டுப் பள்ளி உளான் கழல் சேர்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்ஊனை விட்டுயிர் போவதன் முன்னமேகான வேடர் கருதுங்காட் டுப்பள்ளிஞான நாயக னைச்சென்று நண்ணுமே.
சொற்பிரிப்பு
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே,கான வேடர் கருதும் காட்டுப்பள்ளிஞான நாயகனைச் சென்று நண்ணுமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அருத்த மும்மனை யாளொடு மக்களும்பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங்கருத்தன் கண்ணுதல் அண்ணல்காட் டுப்பள்ளித்திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.
சொற்பிரிப்பு
அருத்தமும் மனையாளொடு மக்களும்பொருத்தம் இல்லை பொல்லாதது போக்கிடும்கருத்தன், கண்ணுதல் அண்ணல், காட்டுப்பள்ளித்திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்அற்ற போதணை யாரவ ரென்றென்றேகற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப்பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.
சொற்பிரிப்பு
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்,அற்ற போது அணையார், அவர் என்று என்றே,கற்றவர்கள் கருதும் காட் டுப்பள்ளிப்பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந்துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளிஉடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.
சொற்பிரிப்பு
அடும்பும், கொன்றையும் வன்னியும், மத்தமும்,துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்;கடம்பன் தாதை கருதும் காட்டுப்பள்ளிஉடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்ஐயன் றன்னடி யேயடைந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார்,பொய்யை மெய் என்று புக்கு உடன் வீழன்மின்!கையில் மான் உடையான், காட்டுப்பள்ளி எம்ஐயன் தன் அடியே அடைந்து உய்ம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறைநீல கண்டனை நித்தல் நினைமினே.
சொற்பிரிப்பு
வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர்,சீலம் கெட்டுத் திகையன்மின், பேதைகாள்!காலையே தொழும் காட்டுப்பள்ளி உறைநீல கண்டனை நித்தல் நினைமினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள்ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள்அன்று வானவர்க் காக விடமுண்டகண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.
சொற்பிரிப்பு
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள்ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்!அன்று வானவர்க்காக விடம் உண்டகண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

எண்ணி லாவரக் கன்மலை யேந்திடஎண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியைநண்ணு வாரவர் தம்வினை நாசமே.
சொற்பிரிப்பு
எண்ணிலா அரக்கன் மலை ஏந்திடஎண்ணி நீள்முடி பத்தும் இறுத்தவன்,கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியைநண்ணுவார் அவர் தம் வினை நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.