திருமுறை 5 · 5.083 · 10

திருநாகைக்காரோணம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
நாகைக்காரோணம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பாணத் தால்மதில் மூன்று மெரித்தவன்பூணத் தானர வாமை பொறுத்தவன்காணத் தானினி யான்கடல் நாகைக்காரோணத் தானென நம்வினை ஓயுமே.
சொற்பிரிப்பு
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;பூணத்தான் அரவு ஆமை பொறுத்தவன்;காணத்தான் இனியான் கடல் நாகைக்கா-ரோணத்தான் என நம் வினை ஓயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வண்ட லம்பிய வார்சடை ஈசனைவிண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக்கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்கண்ட லும்வினை யான கழலுமே.
சொற்பிரிப்பு
வண்டு அலம்பிய வார்சடை ஈசனை,விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனைக்,கண்டல் அம் கமழ் நாகைக் காரோணனைக்,கண்டலும், வினை ஆன கழலுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

புனையும் மாமலர் கொண்டு புரிசடைநனையும் மாமலர் சூடிய நம்பனைக்கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனைநினைய வேவினை யாயின நீங்குமே.
சொற்பிரிப்பு
புனையும் மாமலர் கொண்டு, புரிசடைநனையும் மாமலர் சூடிய நம்பனைக்,கனையும் வார்கடல் நாகைக் காரோணனை,நினையவே, வினை ஆயின நீங்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கொல்லை மால்விடை யேறிய கோவினைஎல்லி மாநட மாடும் இறைவனைக்கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்சொல்ல வேவினை யானவை சோருமே.
சொற்பிரிப்பு
கொல்லை மால்விடை ஏறிய கோவினை,எல்லி மாநடம் ஆடும் இறைவனைக்,கல்லின் ஆர் மதில் நாகைக் காரோணனைச்,சொல்லவே வினை ஆனவை சோருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்கைய னைக்கடல் நாகைக்கா ரோணனைமைய னுக்கிய கண்டனை வானவர்ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
சொற்பிரிப்பு
மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக்கையனைக், கடல் நாகைக் காரோணனை,மை அனுக்கிய கண்டனை, வானவர்ஐயனைத், தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அலங்கல் சேர்சடை ஆதி புராணனைவிலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனைவலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
சொற்பிரிப்பு
அலங்கல் சேர்சடை ஆதி புராணனை,விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்,கலங்கள் சேர் கடல் நாகைக் காரோணனை,வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சினங்கொள் மால்கரி சீறிய ஏறினைஇனங்கொள் வானவ ரேத்திய ஈசனைக்கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனைமனங்கொள் வார்வினை யாயின மாயுமே.
சொற்பிரிப்பு
சினம்கொள் மால் கரி சீறிய ஏறினை,இனம்கொள் வானவர் ஏத்திய ஈசனைக்,கனம்கொள் மாமதில் நாகைக் காரோணனை,மனம்கொள்வார் வினை ஆயின மாயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அந்த மில்புகழ் ஆயிழை யார்பணிந்தெந்தை யீசனென் றேத்தும் இறைவனைக்கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே.
சொற்பிரிப்பு
அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து,எந்தை! ஈசன்! என்று ஏத்தும் இறைவனைக்,கந்த வார் பொழில் நாகைக் காரோணனைச்,சிந்தை செய்யக் கெடும், துயர்; திண்ணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனைஇருவ ருக்கறி வொண்ணா இறைவனைஒருவ னையுண ரார்புர மூன்றெய்தசெருவ னைத்தொழத் தீவினை தீருமே.
சொற்பிரிப்பு
கருவனைக், கடல் நாகைக் காரோணனை,இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை,ஒருவனை, உணரார் புரம் மூன்று எய்தசெருவனைத், தொழத் தீவினை தீருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன்வடவ ரையெடுத் தார்த்த அரக்கனைஅடர வூன்றிய பாதம் அணைதரத்தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே.
சொற்பிரிப்பு
கடல் கழி தழி நாகைக் காரோணன் தன்,வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனைஅடர ஊன்றிய பாதம் அணைதரத்,தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.