திருமுறை 5 · 5.082 · 10

திருவான்மியூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
வான்மியூர்
நாடு
தொண்டைநாடு

1

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
விண்ட மாமலர் கொண்டு, விரைந்து, நீர்,அண்ட நாயகன் தன் அடி சூழ்மின்கள்!பண்டு நீர் செய்த பாவம் பறைந்திடும்,வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்தருளு மாவல்ல ஆதியா யென்றலும்மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர்,மருளும் மாந்தரை மாற்றி, மயக்கு அறுத்துஅருளுமா வல்ல ஆதியாய்! என்றலும்மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்தந்த மில்குணத் தானை யடைந்துநின்றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து,அந்தம் இல் குணத்தானை அடைந்து, நின்று,எந்தை! ஈசன்! என்று ஏத்திட வல்லிரேல்,வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற்கள்ள முள்ள வழிக்கசி வானலன்வெள்ள முமர வும்விர வுஞ்சடைவள்ள லாகிய வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
உள்ளம் உள் கலந்து ஏத்தவல்லார்க்கு அலால்கள்ளம் உள்ள வழிக்கசிவான் அலன்வெள்ளமும் அரவும் விரவும் சடைவள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியைவடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினைமடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
படங்கொள் பாம்பு அரைப் பால்மதி சூடியை,வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்,தொடர்ந்து நின்று தொழுது, எழுவார் வினைமடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்;பஞ்சின் மெல் அடியாள் உமை பங்க! என்றுஅஞ்சி, நாள்மலர் தூவி, அழுதிரேல்,வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர்சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக்குணங்கள் தாம் பரவிக் குறைந்து உக்கவர்,சுணங்கு பூண்முலைத் தூமொழியார் அவர்,வணங்க, நின்றிடும் வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப்பாதி பெண்ணுரு வாய பரமனென்றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர்வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
ஆதியும், அரனாய், அயன், மாலுமாய்ப்,பாதி பெண் உரு ஆய பரமன் என்றுஓதி, உள் குழைந்து ஏத்தவல்லார் அவர்வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங்காட்டில் வேவதன் முன்னங் கழலடிநாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்காட்டில் வேவதன் முன்னம், கழல்அடிநாட்டி, நாள்மலர் தூவி, வலம் செயில்,வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பார மாக மலையெடுத் தான்றனைச்சீர மாகத் திருவிர லூன்றினான்ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்வார மாயினன் வான்மியூ ரீசனே.
சொற்பிரிப்பு
பாரம் ஆக மலை எடுத்தான் தனைச்சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்;ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும்,வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.