1
வானஞ் சேர்மதி சூடிய மைந்தனைநீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலைஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக்கோனெஞ் செல்வனைக் கூறிட கிற்றியே.
சொற்பிரிப்பு
வானம் சேர்மதி சூடிய மைந்தனைநீ, நெஞ்சே! கெடுவாய் நினைகிற்கிலை;ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறைக்கோன், எம் செல்வனைக் கூறிட கிற்றியே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.