திருமுறை 5 · 5.079 · 10

திருப்புள்ளிருக்குவேளூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
புள்ளிருக்குவேளூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர்நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.
சொற்பிரிப்பு
வெள் எருக்கு அரவம் விரவும் சடைப்புள்ளிருக்கு வேளூர் அரன் பொற்கழல்உள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்நள் இருப்பர் நரகக் குழியிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமேபோற்ற வல்லீரேற் புள்ளிருக் குவேளூர்சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.
சொற்பிரிப்பு
மாற்றம் ஒன்று அறியீர்; மனை வாழ்க்கை போய்க்கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே,போற்ற வல்லிரேல் புள்ளிருக்குவேளூர்,சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்மினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அரும றையனை ஆணொடு பெண்ணனைக்கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப்புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவேளூர்உருகி நைபவர் உள்ளங் குளிருமே.
சொற்பிரிப்பு
அருமறையனை ஆணொடு பெண்ணனைக்,கருவிடம் மிக உண்ட எம் கண்டனைப்,புரிவெண் நூலனைப் புள்ளிருக்குவேளூர்,உருகி நைபவர் உள்ளம் குளிருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தன்னு ருவை யொருவர்க் கறிவொணாமின்னு ருவனை மேனிவெண் ணீற்றனைப்பொன்னு ருவனைப் புள்ளிருக் குவேளூர்என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.
சொற்பிரிப்பு
தன் உருவை ஒருவர்க்கு அறிவு ஒணாமின் உருவனை மேனி வெண் நீற்றனைப்,பொன் உருவனைப் புள்ளிருக்குவேளூர்!என்ன வல்லவர்க்கு இல்லை, இடர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

செங்கண் மால்பிர மற்கு மறிவொணாஅங்கி யின்னுரு வாகி அழல்வதோர்பொங்க ரவனைப் புள்ளிருக் குவேளூர்மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே.
சொற்பிரிப்பு
செங்கண் மால் பிரமற்கும் அறிவு ஒணாஅங்கியின் உரு ஆகி, அழல்வது ஓர்பொங்கு அரவனைப், புள்ளிருக்குவேளூர்,மங்கை பாகனை வாழ்த்த, வரும், இன்பே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற்செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்புற்ற ரவனைப் புள்ளிருக் குவேளூர்பற்ற வல்லவர் பாவம் பறையுமே.
சொற்பிரிப்பு
குற்றம் இல்லியைக் கோலச் சிலையினால்செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியைப்,புற்ற அரவனைப் புள்ளிருக்குவேளூர்,பற்ற வல்லவர் பாவம் பறையுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கையி னோடுகால் கட்டி யுமரெலாம்ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்பொய்யி லாவரன் புள்ளிருக் குவேளூர்மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.
சொற்பிரிப்பு
கையினோடு கால் கட்டி, உமர் எலாம்,ஐயன் வீடினன் என்பதன் முன்னம், நீர்,பொய் இலா அரன் புள்ளிருக்குவேளூர்,மை உலாவிய கண்டனை, வாழ்த்துமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உள்ளம் உள்கி உகந்து சிவனென்றுமெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையேபுள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர்வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.
சொற்பிரிப்பு
உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று,மெள்ள உள்க வினைகெடும் மெய்ம்மையே;புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்,வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

அரக்க னார்தலை பத்தும் அழிதரநெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவியபொருப்ப னாருறை புள்ளிருக் குவேளூர்விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே.
சொற்பிரிப்பு
அரக்கனார் தலை பத்தும் அழிதரநெருக்கி, மாமலர்ப் பாதம் நிறுவியபொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்,விருப்பினால் தொழுவார் வினை வீடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.