திருமுறை 5 · 5.078 · 10

திருக்கோடிகா

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கோடிகா
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவெனஎங்கி லாததோர் இன்பம்வந் தெய்துமே.
சொற்பிரிப்பு
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன்,வெங்குலாம் மத வேழம் வெகுண்டவன்,கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என,எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங்கோடி காவனைக் கூறீரேற் கூறினேன்பாடி காவலிற் பட்டுக் கழிதிரே.
சொற்பிரிப்பு
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால்ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும்கோடிகாவனைக் கூறீரேல், கூறினேன்;பாடி காவலில் பட்டுக் கழிதிரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார்கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங்கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே.
சொற்பிரிப்பு
முல்லை நல் முறுவல் உமை பங்கனார்,தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்,கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்குஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நாவ ளம்பெறு மாறும னன்னுதல்ஆம ளஞ்சொலி அன்புசெ யின்னலாற்கோம ளஞ்சடைக் கோடிகா வாவெனஏவ ளின்றெனை ஏசுமவ் வேழையே.
சொற்பிரிப்பு
நா வளம் பெறும் ஆறு, மன் நன்னுதல்ஆம் அளம் சொலி அன்புசெயின் அலால்கோமளஞ் சடைக் கோடிகாவா! எனஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வீறு தான்பெறு வார்சில ராகிலும்நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேற்கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால்ஏறு வேனும்மால் ஏசப் படுவனோ.
சொற்பிரிப்பு
வீறு தான் பெறுவார் சிலர் ஆகிலும்,நாறு பூங்கொன்றை தான் மிக நல்கானேல்,கூறுவேன், கோடிகா உளாய்! என்று; மால்ஏறுவேன்; நும்மால் ஏசப் படுவனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நாடி நாரணன் நான்முகன் வானவர்தேடி யேசற வுந்தெரி யாததோர்கோடி காவனைக் கூறாத நாளெலாம்பாடி காவலிற் பட்டுக் கழியுமே.
சொற்பிரிப்பு
நாடி நாரணன் நான்முகன் வானவர்தேடி ஏசறவும் தெரியாததோர்கோடிகாவனைக் கூறாத நாளெலாம்பாடி காவலிற் பட்டுக் கழியுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

வரங்க ளால்வரை யையெடுத் தான்றனைஅரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர்குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவெனஇரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே.
சொற்பிரிப்பு
வரங்களால் வரையை எடுத்தான் தனைஅரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர்,குரங்கு சேர் பொழில் கோடிகாவா! எனஇரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.