திருமுறை 5 · 5.077 · 10

திருச்சேறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
சேறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங்கூரி தாய அறிவுகை கூடிடுஞ்சீரி யார்பயில் சேறையுட் செந்நெறிநாரி பாகன்றன் நாமம் நவிலவே.
சொற்பிரிப்பு
பூரியா வரும் புண்ணியம்; பொய்கெடும்;கூரிது ஆய அறிவு கைகூடிடும்சீரியார் பயில் சேறையுள் செந்நெறிநாரி பாகன் தன் நாமம் நவிலவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமேமின்னு வார்சடை வேதவி ழுப்பொருள்செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறிமன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
சொற்பிரிப்பு
என்ன மாதவம் செய்தனை! நெஞ்சமே!மின்னு வார்சடை வேத விழுப்பொருள்,செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறிமன்னு சோதி, நம்பால் வந்து வைகவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணிஇறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ்சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
சொற்பிரிப்பு
பிறப்பு, மூப்பு பெரும்பசி, வான்பிணி,இறப்பு, நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும்சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல்மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவியஆட லான்றன் அடியடைந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து, நீர்,ஓடி எய்த்தும் பயன் இலை; ஊமர்காள்!சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவியஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன்திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறைஅண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
சொற்பிரிப்பு
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்துண்ணென் தோன்றில் துரக்கும் வழிகண்டேன்;திண்ணன் சேறைத் திருச்செந்நெறி உறைஅண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென்ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவியஅப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
சொற்பிரிப்பு
தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்?ஒப்பு இல் வேந்தர் ஒருங்குடன் சீறில் என்?செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவியஅப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறைஅத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே.
சொற்பிரிப்பு
வைத்த மாடும் மடந்தை நல்லார்களும்,ஒத்து ஒவ்வாத உற்றார்களும், என் செய்வார்?சித்தர் சேறைத் திருச்செந்நெறி உறைஅத்தர் தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வதுலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமேஇலங்கு சேறையிற் செந்நெறி மேவியஅலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
சொற்பிரிப்பு
குலங்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ?துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே!இலங்கு சேறையில் செந்நெறி மேவியஅலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்விழவி டாவிடில் வேண்டிய எய்தொணாதிகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவியஅழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
சொற்பிரிப்பு
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்விழ விடாவிடில் வேண்டிய எய்த ஒணா;திகழ்கொள் சேறையில் செந்நெறி மேவியஅழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்வருந்த வூன்றி மலரடி வாங்கினான்திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.
சொற்பிரிப்பு
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான்வருந்த ஊன்றி மலர்அடி வாங்கினான்திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்குஇருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.