திருமுறை 5 · 5.076 · 10

திருக்கானூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கானூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறைஉருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங்கருவ னாகி முளைத்தவன் கானூரிற்பரம னாய பரஞ்சுடர் காண்மினே.
சொற்பிரிப்பு
திருவின் நாதனும் செம்மலர் மேல் உறைஉருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம்கருவன் ஆகி முளைத்தவன் கானூரில்பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதிஉண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள்கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப்புண்ட ரீகப் பொதும்பி லொதுங்கியே.
சொற்பிரிப்பு
பெண்டிர், மக்கள் பெருந்துணை, நன்நிதி,உண்டு இன்றே என்று உகவன்மின், ஏழைகாள்!கண்டு கொண்மின், நீர் கானூர் முளையினைப்,புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம்மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்காயத் தேயுளன் கானூர் முளையினைவாயத் தால்வணங் கீர்வினை மாயவே.
சொற்பிரிப்பு
தாயத்தார், தமர் நன்நிதி, என்னும் இம்மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்!காயத்தே உளன் கானூர் முளையினைவாய் அத்தால் வணங்கீர், வினை மாயவே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே.
சொற்பிரிப்பு
குறியில் நின்று உண்டு கூறை இலாச் சமண்நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்;அறியல் உற்றிரேல் கானூர் முளை அவன்செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையைமெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள்சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்அத்தன் பாத மடைதல் கருமமே.
சொற்பிரிப்பு
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையைமெய்த்தன் என்று வியந்திடல், ஏழைகாள்!சித்தர், பத்தர்கள் சேர் திருக்கானூரில்அத்தன் பாதம் அடைதல் கருமமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்செல்வ மல்கு திருக்கானூ ரீசனைஎல்லி யும்பக லும்மிசை வானவாசொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே.
சொற்பிரிப்பு
கல்வி ஞானக் கலைப்பொருள் ஆயவன்,செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை,எல்லியும் பகலும் இசைவு ஆனவாசொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங்காரு மாருதங் கானூர் முளைத்தவன்சேர்வு மொன்றறி யாது திசைதிசைஓர்வு மொன்றில ரோடித் திரிவரே.
சொற்பிரிப்பு
நீரும், பாரும் நெருப்பும், அருக்கனும்,காரும், மாருதம் கானூர் முளைத்தவன்;சேர்வும் ஒன்று அறியாது, திசைதிசைஓர்வும் ஒன்று இலர் ஓடித் திரிவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஓமத் தோடயன் மாலறி யாவணம்வீமப் பேரொளி யாய விழுப்பொருள்காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.
சொற்பிரிப்பு
ஓமத்தோடு அயன் மால் அறியாவணம்வீமப் பேர் ஒளி ஆய விழுப்பொருள்,காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்;சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலைஉன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல்தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.
சொற்பிரிப்பு
வன்னி, கொன்றை எருக்கு, அணிந்தான் மலைஉன்னியே சென்று எடுத்தவன் ஒண்திறல்தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்கன்னி மாமதில் கானூர்க் கருத்தனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.