திருமுறை 5 · 5.075 · 10

திருக்குரக்குக்கா

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
குரக்குக்கா
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.
சொற்பிரிப்பு
மரக்கொக்காம் என வாய்விட்டு அலறி, நீர்,சரக்குக் காவித் திரிந்து அயராது, கால்பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக்குரக்குக் கா அடையக், கெடும் குற்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கட்டா றேகழி காவிரி பாய்வயல்கொட்டா றேபுன லூறு குரக்குக்காமுட்டா றாவடி யேத்த முயல்பவர்க்கிட்டா றாவிட ரோட எடுக்குமே.
சொற்பிரிப்பு
கட்டு ஆறே கழி காவிரி பாய்வயல்கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா,முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்குஇட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கைய னைத்துங் கலந்தெழு காவிரிசெய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்காஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
சொற்பிரிப்பு
கை அனைத்தும் கலந்து எழு காவிரி,செய் அனைத்திலும் சென்றிடும், செம்புனல்கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்காஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மிக்க னைத்துத் திசையும் அருவிகள்புக்குக் காவிரி போந்த புனற்கரைக்கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்காநக்க னைநவில் வார்வினை நாசமே.
சொற்பிரிப்பு
மிக்க அனைத்துத் திசையும் அருவிகள்புக்குக் காவிரி போந்த புனல்கரைக்,கொக்கு இனம் பயில் சோலைக், குரக்குக்காநக்கனை நவில்வார் வினை நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரிஇட்ட நீர்வய லெங்கும் பரந்திடக்கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்காஇட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.
சொற்பிரிப்பு
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரிஇட்ட நீர் வயல் எங்கும் பரந்திடக்,கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்காஇட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மேலை வானவ ரோடு விரிகடல்மாலும் நான்முக னாலுமளப் பொணாக்கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.
சொற்பிரிப்பு
மேலை வானவரோடு, விரிகடல்மாலும், நான்முகனாலும், அளப்பு ஒணாக்கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்பாலராய்த் திரிவார்க்கு இல்லை, பாவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆல நீழ லமர்ந்த அழகனார்கால னையுதை கொண்ட கருத்தனார்கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்பால ருக்கருள் செய்வர் பரிவொடே.
சொற்பிரிப்பு
ஆல நீழல் அமர்ந்த அழகனார்,காலனை உதை கொண்ட கருத்தனார்,கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்-பாலருக்கு அருள் செய்வர், பரிவொடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்அக்க ரையரெம் மாதிபு ராணனார்கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்காநக்க னைத்தொழ நம்வினை நாசமே.
சொற்பிரிப்பு
செக்கர் அங்கு எழு செஞ்சுடர்ச் சோதியார்,அக்கு அரையர், எம் ஆதி புராணனார்,கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்காநக்கனைத், தொழ நம் வினை நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர்கரிய கண்டன் கழலடி தன்னையேகுரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்காஇரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.
சொற்பிரிப்பு
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர்,கரிய கண்டன் கழல் அடி தன்னையே!குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா!இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இரக்க மின்றி மலையெடுத் தான்முடிஉரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங்குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்காவரத்த னைப்பெற வானுல காள்வரே.
சொற்பிரிப்பு
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி,உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவிடம்குரக்கு இனம் குதி கொள்ளும் குரக்குக்கா;வரத்தனைப் பெற வான்உலகு ஆள்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.