1
விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமேகரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்இரும்பி னூறல றாததோர் வெண்டலைஎறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
சொற்பிரிப்பு
விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;-இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலைஎறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.