திருமுறை 5 · 5.073 · 10

திருமங்கலக்குடி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
மங்கலக்குடி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

தங்க லப்பிய தக்கன் பெருவேள்விஅங்க லக்கழித் தாரருள் செய்தவன்கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடுமங்க லக்குடி மேய மணாளனே.
சொற்பிரிப்பு
தங்கு அலப்பிய தக்கன் பெருவேள்விஅங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன்-கொங்கு அலர்க்குழல் கொம்பு அனையாளொடுமங்கலக்குடி மேய மணாளனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காவி ரியின்வ டகரைக் காண்டகுமாவி ரியும்பொ ழில்மங் கலக்குடித்தேவ ரியும்பி ரமனுந் தேடொணாத்தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.
சொற்பிரிப்பு
காவிரியின் வடகரைக் காண்தகுமா விரியும் பொழில் மங்கலக்குடித்தேவு அரியும் பிரமனும் தேட ஒணாத்தூ எரிச்சுடர்ச் சோதியுள் சோதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மங்க லக்குடி ஈசனை மாகாளிவெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்சங்கு சக்கர தாரி சதுர்முகன்அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.
சொற்பிரிப்பு
மங்கலக்குடி ஈசனை மாகாளி,வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும் நேர்சங்கு சக்கரதாரி, சதுர்முகன்,அங்கு அகத்தியனும் அர்ச்சித்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடிநஞ்ச மாரமு தாக நயந்துகொண்டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடைநெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.
சொற்பிரிப்பு
மஞ்சன், வார்கடல் சூழ் மங்கலக்குடி,நஞ்சம் ஆர் அமுது ஆக நயந்துகொண்டு,அஞ்சும் ஆடல் அமர்ந்து, அடியேனுடைநெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

செல்வ மல்கு திருமங் கலக்குடிச்செல்வ மல்கு சிவநிய மத்தராய்ச்செல்வ மல்கு செழுமறை யோர்தொழச்செல்வன் றேவியொ டுந்திகழ் கோயிலே.
சொற்பிரிப்பு
செல்வம் மல்கு திருமங்கலக்குடிச்செல்வம் மல்கு சிவ நியமத்தராய்ச்,செல்வம் மல்கு செழுமறையோர் தொழச்,செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மன்னு சீர்மங் கலக்குடி மன்னியபின்னு வார்சடைப் பிஞ்ஞகன் றன்பெயர்உன்னு வாரு முரைக்கவல் லார்களுந்துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.
சொற்பிரிப்பு
மன்னு சீர் மங்கலக்குடி மன்னியபின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன் பெயர்உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்துன்னுவார், நன்நெறி தொடர்வு எய்தவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மாத ரார்மரு வும்மங்க லக்குடிஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்வேத நாயகன் வேதியர் நாயகன்பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
சொற்பிரிப்பு
மாதரார் மருவும் மங்கலக்குடிஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்,வேத நாயகன் வேதியர் நாயகன்,பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடிவிண்ட தாதையைத் தாளற வீசியசண்ட நாயக னுக்கருள் செய்தவன்துண்ட மாமதி சூடிய சோதியே.
சொற்பிரிப்பு
வண்டு சேர்பொழில் சூழ் மங்கலக்குடி,விண்ட தாதையைத் தாள் அற வீசியசண்ட நாயகனுக்கு அருள் செய்தவன்துண்ட மாமதி சூடிய சோதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கூசு வாரலர் குண்டர் குணமிலர்நேச மேது மிலாதவர் நீசர்கள்மாசர் பால்மங்க லக்குடி மேவியஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.
சொற்பிரிப்பு
கூசுவார் அலர் குண்டர், குணம் இலர்,நேசம் ஏதும் இலாதவர், நீசர்கள்,மாசர் பால் மங்கலக்குடி மேவியஈசன் வேறுபடுக்க உய்ந்தேன்அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மங்க லக்குடி யான்கயி லைமலைஅங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.
சொற்பிரிப்பு
மங்கலக்குடியான் கயிலை மலைஅங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர் கோன்,தங் கரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து,அங்கு அலைத்து, அழுது உய்ந்தனன் தான் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.