திருமுறை 5 · 5.070 · 10

திருக்கொண்டீச்சரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கொண்டீச்சரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்மண்டி யேச்சுணு மாதரைச் சேராதேசண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.
சொற்பிரிப்பு
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்பால்மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே,சண்டியீச்சுரவர்க்கு அருள் செய்த அக்-கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சுற்ற முந்துணை நன்மட வாளொடுபெற்ற மக்களும் பேண லொழிந்தனர்குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே.
சொற்பிரிப்பு
சுற்றமும், துணை நல் மடவாளொடு,பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்;குற்றம் இல் புகழ்க் கொண்டீச்சுரவனார்பற்று அலால், ஒரு பற்று மற்று இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மாடு தானது வில்லெனின் மானிடர்பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்பாடு மின்பர லோகத் திருத்துமே.
சொற்பிரிப்பு
மாடு தான் அது இல் எனின், மானுடர்பாடு தான் செல்வார் இல்லை; பல் மாலையால்கூட நீர் சென்று கொண்டீச்சுரவனைப்பாடுமின்! பரலோகத்து இருத்துமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தந்தை தாயொடு தார மெனுந்தளைப்பந்த மாங்கறுத் துப்பயில் வெய்தியகொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச்சிந்தை செய்ம்மின் அவனடி சேரவே.
சொற்பிரிப்பு
தந்தை, தாயொடு தாரம், எனும் தளைப்-பந்தம் ஆங்கு அறுத்துப் பயில்வு எய்தியகொந்து அவிழ்பொழில் கொண்டீச்சுரவனைச்சிந்தை செய்ம்மின் அவன் அடி சேரவே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கேளு மின்னிள மையது கேடுவந்தீளை யோடிரு மல்லது வெய்தன்முன்கோள ராவணி கொண்டீச் சுரவனைநாளு மேத்தித் தொழுமின்நன் காகுமே.
சொற்பிரிப்பு
கேளுமின்; இளமை அது கேடு வந்துஈளையோடு இருமல் அது எய்தல் முன்,கோள் அரா அணி கொண்டீச்சுரவனைநாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினைகொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனைஎம்பி ரானென வல்லவர்க் கில்லையே.
சொற்பிரிப்பு
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்துன்பமும் துயரும் எனும் சூழ்வினை,கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை,எம்பிரான்! என வல்லவர்க்கு இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அல்ல லோடரு நோயில் அழுந்திநீர்செல்லு மாநினை யாதே கனைகுரற்கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனைவல்ல வாறு தொழவினை மாயுமே.
சொற்பிரிப்பு
அல்லலோடு அரு நோயில் அழுந்தி, நீர்,செல்லுமா நினையாதே, கனைகுரல்கொல்லை ஏறுடைக் கொண்டீச்சுரவனைவல்லவாறு தொழ, வினை மாயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நாறு சாந்தணி நன்முலை மென்மொழிமாறி லாமலை மங்கையொர் பாகமாக்கூற னாருறை கொண்டீச் சுரநினைந்தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.
சொற்பிரிப்பு
நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி,மாறு இலா மலை மங்கை ஓர் பாகமாக்கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்துஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அயிலார் அம்பெரி மேருவில் லாகவேஎயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.
சொற்பிரிப்பு
அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவேஎயிலாரும் பொடியாய் விழ எய்தவன்,குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப்பயில்வாரும் பெருமை பெறும் பாலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனைமலையி னாலடர்த் துவிறல் வாட்டினான்குலையி னார்பொழிற் கொண்டீச் சுரவனைத்தலையி னால்வணங் கத்தவ மாகுமே.
சொற்பிரிப்பு
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனைமலையினால் அடர்த்து விறல் வாட்டினான்,குலையின் ஆர்பொழில் கொண்டீச்சுரவனைத்தலையினால் வணங்கத், தவம் ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.