1
ஓத மார்கட லின்விட முண்டவன்பூத நாயகன் பொற்கயி லைக்கிறைமாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்பாத மேத்தப் பறையுநம் பாவமே.
சொற்பிரிப்பு
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,பூத நாயகன் பொன் கயிலைக்கு இறை,மாது ஓர் பாகன் வலஞ்சுழி ஈசனைப்,பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.