1
பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான்நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார்பாவ மாயின பாறிப் பறையவேதேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.
சொற்பிரிப்பு
பூவ னூர்ப் புனிதன் திருநாமம் தான்நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,பாவம் ஆயின பாறிப் பறையவே,தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.