திருமுறை 5 · 5.064 · 11

திருக்கோழம்பம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கோழம்பம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய்ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள்கோழம் பத்துறை கூத்தன் குரைகழற்தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.
சொற்பிரிப்பு
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்போய்ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்;கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கயிலை நன்மலை யாளுங் கபாலியைமயிலி யன்மலை மாதின் மணாளனைக்குயில்ப யில்பொழிற் கோழம்ப மேயவென்உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே.
சொற்பிரிப்பு
கயிலை நல்மலை ஆளும் கபாலியை,மயில் இயல் மலை மாதின் மணாளனைக்,குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என்உயிரினை, நினைந்து உள்ளம் உருகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வாழும் பான்மைய ராகிய வான்செல்வந்தாழும் பான்மைய ராகித்தம் வாயினால்தாழம் பூமணம் நாறிய தாழ்பொழிற்கோழம் பாவெனக் கூடிய செல்வமே.
சொற்பிரிப்பு
வாழும் பான்மையர் ஆகிய வான்செல்வம்தாழும் பான்மையர் ஆகித் தம் வாயினால்தாழம்பூ மணம் நாறிய தாழ்பொழில்கோழம்பா! எனக் கூடிய செல்வமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடுகோடல் பூத்தலர் கோழம்பத் துண்மகிழ்ந்தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே.
சொற்பிரிப்பு
பாடல் ஆக்கிடும் பண்ணொடு, பெண் இவள்;கூடல் ஆக்கிடும் குன்றின் மணல்கொடு;கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்துஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர்பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன்குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான்நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே.
சொற்பிரிப்பு
தளிர்கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர்பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன்குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான்;நளிர்கொள் நீர், சடை மேலும் நயந்ததே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம்வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பிற்கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண்டாதி பாத மடையவல் லார்களே.
சொற்பிரிப்பு
நாதர் ஆவர் நமக்கும் பிறர்க்கும், தாம்வேத நாவர் விடைக்கொடியார் வெற்பில்கோதை மாதொடும் கோழம்பம் கோயில் கொண்டஆதி, பாதம் அடைய வல்லார்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

முன்னை நான்செய்த பாவ முதலறப்பின்னை நான்பெரி தும்மருள் பெற்றதும்அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர்பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே.
சொற்பிரிப்பு
முன்னை நான் செய்த பாவம் முதல் அறப்,பின்னை நான் பெரிதும் அருள் பெற்றதுஅன்னம் ஆர் வயல் கோழம்பத்துள் அமர்பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண்கோழை மாரொடுங் கூடிய குற்றமாங்கூழை பாய்வயற் கோழம்பத் தானடிஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே.
சொற்பிரிப்பு
ஏழைமாரிடம் நின்று, இரு கைக்கொடு, உண்கோழைமாரொடும் கூடிய குற்றமாம்-கூழை பாய்வயல் கோழம்பத்தான் அடிஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அரவ ணைப்பயில் மாலயன் வந்தடிபரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக்குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத்துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே.
சொற்பிரிப்பு
அரவு அணைப்பயில் மால், அயன் வந்துஅடிபரவனைப்; பரமாம் பரஞ்சோதியைக்;குரவனைக்; குரவு ஆர் பொழில் கோழம்பத்துஉரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்குமரன் தாதைநற் கோழம்ப மேவியஅமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்அமர லோகம தாளுடை யார்களே.
சொற்பிரிப்பு
சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்குமரன் தாதை, நல் கோழம்பம் மேவிய,அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள்அமர லோகம் அது ஆள் உடையார்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

துட்ட னாகி மலையெடுத் தஃதின்கீழ்ப்பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான்கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென்றிட்ட கீத மிசைத்த அரக்கனே.
சொற்பிரிப்பு
துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ்ப்பட்டு, வீழ்ந்து படர்ந்து, உய்யப் போயினான்-கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்றுஇட்ட கீதம் இசைத்த அரக்கனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.