1
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்அருத்த னையடி யேன்மனத் துள்ளமர்கருத்த னைக்கடு வாய்ப்புன லாடியதிருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தெனே.
சொற்பிரிப்பு
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்அருத்தனை, அடியேன் மனத்துள் அமர்கருத்தனைக், கடுவாய்ப் புனல் ஆடியதிருத்தனைப், புத்தூர்ச் சென்று கண்டு உய்ந்தெனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.