திருமுறை 5 · 5.060 · 10

திருமாற்பேறு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
மாற்பேறு
நாடு
தொண்டைநாடு

1

ஏது மொன்று மறிவில ராயினும்ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்பேத மின்றி அவரவர் உள்ளத்தேமாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
சொற்பிரிப்பு
ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்,ஓதி அஞ்சு எழுத்தும் உணர்வார்கட்குப்பேதம் இன்றி அவர்அவர் உள்ளத்தேமாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்கச்ச மாவிட முண்டகண் டாவெனவைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே.
சொற்பிரிப்பு
அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள்நிச்சலும் நினையாய், வினை போய் அறக்!கச்ச மாவிடம் உண்ட கண்டா! என,வைச்ச மாநிதி ஆவர், மாற்பேறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே.
சொற்பிரிப்பு
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்!பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினாற்பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.
சொற்பிரிப்பு
இருந்து சொல்லுவன் கேண்மின்கள்; ஏழைகாள்;அருந்தவம் தரும் அஞ்சு எழுத்து ஓதினால்;பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர்மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற்கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர்மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.
சொற்பிரிப்பு
சாற்றிச் சொல்லுவன் கேண்மின்; தரணியீர்!ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்,கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர்மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஈட்டு மாநிதி சால இழக்கினும்வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்காட்டில் மாநட மாடுவாய் காவெனில்வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே.
சொற்பிரிப்பு
ஈட்டும் மாநிதி சால இழக்கினும்,வீட்டும் காலன் விரைய அழைக்கினும்,காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில்,வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஐய னேயர னேயென் றரற்றினால்உய்ய லாமுல கத்தவர் பேணுவர்செய்ய பாத மிரண்டும் நினையவேவைய மாளவும் வைப்பர்மாற் பேறரே.
சொற்பிரிப்பு
ஐயனே! அரனே! என்று அரற்றினால்,உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்;செய்ய பாதம் இரண்டும் நினையவே,வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

உந்திச் சென்று மலையை யெடுத்தவன்சந்து தோளொடு தாளிற வூன்றினான்மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறெனஅந்த மில்லதோர் இன்பம் அணுகுமே.
சொற்பிரிப்பு
உந்திச் சென்று மலையை எடுத்தவன்சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்-மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு” என,அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.