1
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமேஅலையி னார்பொழி லாறை வடதளிநிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள்-நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே?அலையின் ஆர் பொழில் ஆறை வடதளிநிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.