திருமுறை 5 · 5.055 · 10

திருநாரையூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
நாரையூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்(கு)ஆறு சூடலும் அம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
வீறு தான்உடை வெற்பன் மடந்தை ஓர்-கூறன் ஆகிலும் கூன்பிறை சூடிலும்,நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்குஆறு சூடலும் அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

புள்ளி கொண்ட புலியுரி யாடையும்வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சைஅள்ளி யுண்டலும் அம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும்,வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும்,-நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சைஅள்ளி உண்டலும் அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வேடு தங்கிய வேடமும் வெண்டலைஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்நாடு தங்கிய நாரையூ ரான்நடம்ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
வேடு தங்கிய வேடமும், வெண்தலை-ஓடு தங்கிய உண்பலி கொள்கையும்-நாடு தங்கிய நாரையூரான் நடம்-ஆடு பைங்கழல் அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும்மிக்க வெண்டலை மாலை விரிசடைநக்க னாகிலும் நாரையூர் நம்பனுக்(கு)அக்கி னாரமும் அம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்,மிக்க வெண்தலை மாலை, விரிசடைநக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்(கு)அக்கின் ஆரமும் அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வடிகொள் வெண்மழு மானமர் கைகளும்பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்நடிகொள் நன்மயில்சேர்திரு நாரையூர்அடிகள் தம்வடிவம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
வடிகொள் வெண்மழு மான் அமர் கைகளும்பொடிகொள் செம்பவளம் புரை மேனியும்,நடிகொள் நல்மயில் சேர் திரு நாரையூர்அடிகள் தம் வடிவு அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சூலம் மல்கிய கையுஞ் சுடரொடுபாலும் நெய்தயி ராடிய பான்மையும்ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்(கு)ஆல நீழலும் அம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
சூலம் மல்கிய கையும், சுடரொடு,பாலும் நெய்தயிர் ஆடிய பான்மையும்ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்(கு)-ஆல நீழலும் அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பண்ணி னான்மறை பாடலொ டாடலும்எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்அண்ண லார்செய்கை அம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
பண்ணின் நால்மறை பாடலொடு ஆடலும்,எண்ணிலார் புரம் மூன்று எரி செய்தலும்,நண்ணினார் துயர் தீர்த்தலும், நாரையூர்அண்ணலார் செய்கை அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

என்பு பூண்டெரு தேறி இளம்பிறைமின்பு ரிந்த சடைமேல் விளங்கவேநன்ப கற்பலி தேரினும் நாரையூர்அன்ப னுக்கது அம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
என்பு பூண்டு, எருது ஏறி, இளம்பிறைமின் புரிந்த சடைமேல் விளங்கவே,நன்பகல் பலி தேரினும், நாரையூர்அன்பனுக்கு அது அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவேஇரவி னின்றெரி யாடலு நீடுவான்நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக்(கு)அரவும் பூணுதல் அம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே,இரவில் நின்று எரி ஆடலும், நீடு வான்நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு-அரவும் பூணுதல் அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலைஎடுத்த வாளரக் கன்றலை ஈரைஞ்சும்நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.
சொற்பிரிப்பு
கடுக்கை அம் சடையன் கயி லை மலைஎடுத்த வாள் அரக்கன் தலை ஈர்-அஞ்சும்நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல்அடுத்த தன்மையும் அம்ம அழகிதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.