1
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடிமட்ட லரிடு வார்வினை மாயுமால்கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீரட்ட னாரடி சேரு மவருக்கே.
சொற்பிரிப்பு
எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடிமட்டு அலர், இடுவார் வினை மாயுமால்கட்டித்தேன் கலந்தன்ன கெடில வீரட்டனார் அடி சேரும் அவருக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.