திருமுறை 5 · 5.052 · 10

திருநாகேச்சரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
நாகேச்சுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரிசெல்வர் போல்திரு நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்;வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்;பல்லில் ஓடு கை ஏந்திப் பலி திரிசெல்வர் போல் திரு நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்மேவி வந்து வணங்கி வினையொடுபாவ மாயின பற்றறு வித்திடுந்தேவர் போல்திரு நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
நாவல் அம் பெருந் தீவினில் வாழ்பவர்மேவி வந்து வணங்கி, வினையொடுபாவம் ஆயின பற்று அறுவித்திடும்தேவர் போல் திரு நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஓத மார்கட லின்விட முண்டவர்ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம்மாதொர் கூறர் மழுவல னேந்தியநாதர் போல்திரு நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்;ஆதியார், அயனோடு அமரர்க்கு எலாம்;மாது ஓர் கூறர் மழுவலன் ஏந்தியநாதர் போல் திரு நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்ஐந்த லையர வின்பணி கொண்டருள்மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
சந்திர(ன்)னொடு சூரியர் தாம் உடன்-வந்து சீர் வழிபாடுகள் செய்த பின்,ஐந்தலை அரவின் பணி கொண்டு, அருள்மைந்தர் போல் மணி நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பண்டோர் நாளிகழ் வான்பழித் தக்கனார்கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத்தண்ட மாவிதா தாவின் றலைகொண்டசெண்டர் போல்திரு நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
பண்டு ஓர் நாள் இகழ்வான் பழித் தக்கனார்கொண்ட வேள்விக் குமண்டை அது கெடத்,தண்டமா, விதாதாவின் தலைகொண்டசெண்டர் போல் திரு நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வம்பு பூங்குழல் மாது மறுகவோர்கம்ப யானை யுரித்த கரத்தினர்செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடைநம்பர் போல்திரு நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
வம்பு பூங்குழல் மாது மறுக ஓர்கம்ப யானை உரித்த கரத்தினர்;செம்பொன் ஆர் இதழி மலர்ச் செஞ்சடைநம்பர் போல் திரு நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மானை யேந்திய கையினர் மையறுஞானச் சோதியர் ஆதியர் நாமந்தான்ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்குந்தேனர் போல்திரு நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
மானை ஏந்திய கையினர்; மை அறுஞானச் சோதியர் ஆதியர்; நாமம் தான்ஆன அஞ்செழுத்து ஓத, வந்து அண்ணிக்கும்தேனர் போல் திரு நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணிஅழகர் ஆல்நிழற் கீழற மோதியகுழகர் போல்குளிர் நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்;தழல்கொள் மேனியர் சாந்த வெண்நீறு அணிஅழகர்; ஆல் நிழல் கீழ் அறம் ஓதியகுழகர் போல் குளிர் நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
வட்ட மாமதில் மூன்றுடன் வல்அரண்சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர்குட்ட வல்வினை தீர்த்துக், குளிர்விக்கும்சிட்டர் போல் திரு நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தூர்த்தன் றோண்முடி தாளுந் தொலையவேசேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல்ஆர்த்து வந்துல கத்தவ ராடிடுந்தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.
சொற்பிரிப்பு
தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவேசேர்த்தினார், திருப் பாதத்து ஒருவிரல்,ஆர்த்து வந்து, உலகத்தவர் ஆடிடும்தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.