1
நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்கோல மாமதி கங்கையுங் கூட்டினார்சூல மான்மழு வேந்திச் சுடர்முடிப்பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே.
சொற்பிரிப்பு
நீல மா மணி கண்டத்தர்; நீள்சடைக்கோல மா மதி கங்கையும் கூட்டினார்;சூலம் மான் மழு ஏந்திச், சுடர்முடிப்பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.