திருமுறை 5 · 5.049 · 11

திருவெண்காடு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
வெண்காடு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்பெண்காட் டிப்பிறைச் சென்னிவைத் தான்றிருவெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே.
சொற்பிரிப்பு
பண்காட்டிப் படி ஆய தன் பத்தர்க்குக்கண்காட்டிக், கண்ணில் நின்ற மணி ஒக்கும்,பெண்காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திருவெண்காட்டை அடைந்து உய், மட நெஞ்சமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்வெள்ளி யன்கரி யன்பசு வேறியதெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
சொற்பிரிப்பு
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்,ஒள்ளிய(க்) கணம் சூழ் உமை பங்கனார்,வெள்ளியன், கரியன், பசு ஏறியதெள்ளியன் திருவெண்காடு அடை, நெஞ்சே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதேவானோக் கும்வழி யாவது நின்மினோதானோக் குந்தன் னடியவர் நாவினில்தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.
சொற்பிரிப்பு
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே,வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ!தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்-தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவேபெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடந்திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.
சொற்பிரிப்பு
பரு வெண் கோட்டுப் பைங்கண் மத வேழத்தின்உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே;பெரு வெண்காட்டு இறைவன் உறையும் இடம்திருவெண்காடு அடைந்து உய், மட நெஞ்சமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
சொற்பிரிப்பு
பற்ற அவன், கங்கை பாம்பு மதி உடன்உற்றவன் சடையான், உயர் ஞானங்கள்கற்றவன், கயவர் புரம் ஓர் அம்பால்செற்றவன், திரு வெண்காடு அடை, நெஞ்சே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கூடி னானுமை யாளொரு பாகமாய்வேட னாய்விச யற்கருள் செய்தவன்சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்காட னாரடி யேஅடை நெஞ்சமே.
சொற்பிரிப்பு
கூடினான், உமையாள் ஒரு பாகம்ஆய்;வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்;சேடனார்; சிவனார்; சிந்தை மேய வெண்-காடனார்; அடியே அடை, நெஞ்சமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்புரித்த புன்சடை யான்கய வர்புரம்எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.
சொற்பிரிப்பு
தரித்தவன், கங்கை பாம்பு, மதியுடன்;புரித்த புன்சடையான்; கயவர் புரம்எரித்தவன்; மறை நான்கினோடு ஆறு அங்கம்விரித்தவன்,உறை வெண்காடு அடை, நெஞ்சே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்சிட்டன் ஆதிஎன் றுசிந்தை செய்யவேநட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்றஅட்ட மூர்த்திதன் வெண்காடு அடைநெஞ்சே.
சொற்பிரிப்பு
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள்சிட்டன் ஆதி என்று சிந்தை செய்யவேநட்ட மூர்த்தி ஞானச் சுடராய் நின்றஅட்டமூர்த்தி தன் வெண்காடு அடை நெஞ்சே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஏன வேடத்தி னானும் பிரமனும்தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலாஞான வேடன் விசயற்கு அருள்செயும்கான வேடன்றன் வெண்காடு அடைநெஞ்சே.
சொற்பிரிப்பு
ஏன வேடத்தினானும் பிரமனும்தான் அ(வ்) வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலாஞான வேடன் விசயற்கு அருள்செயும்கான வேடன் தன் வெண்காடு அடை, நெஞ்சே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பாலை யாடுவர் பன்மறை ஒதுவர்சேலை யாடிய கண்ணுமை பங்கனார்வேலை யார்விடம் உண்டவெண் காடர்க்குமாலை யாவது மாண்டவர் அங்கமே.
சொற்பிரிப்பு
பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர்,சேலை ஆடிய கண் உமை பங்கனார்,வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்குமாலை ஆவது மாண்டவர் அங்கமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

இராவ ணம் செய மாமதி பற்றவைஇராவ ணம்உடை யான்றனை உள்குமின்இராவ ணன்றனை ஊன்றி அருள்செய்தஇராவ ணன் திரு வெண்காடு அடைமினே.
சொற்பிரிப்பு
இராவணம் செய மாமதி பற்று அவ், ஐ-யிராவணம் உடையான் தனை உள்குமின்!இராவணன் தனை ஊன்றி அருள்செய்தஇரா வணன் திரு வெண்காடு அடைமினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.