திருமுறை 5 · 5.048 · 10

திருவேகம்பம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

பூமே லானும் பூமகள் கேள்வனும்நாமே தேவ ரெனாமை நடுக்குறத்தீமே வும்முரு வாதிரு வேகம்பாஆமோ அல்லற் படவடி யோங்களே.
சொற்பிரிப்பு
பூ மேலானும் பூமகள் கேள்வனும்நாமே தேவர்! எனாமை, நடுக்குறத்,தீ மேவும் உருவா! திரு ஏகம்பா!ஆமோ, அல்லல் பட, அடியோங்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அருந்தி றல்அம ரர்அயன் மாலொடுதிருந்த நின்று வழிபடத் தேவியோடிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.
சொற்பிரிப்பு
அருந்திறல் அமரர் அயன் மாலொடுதிருந்த நின்று வழிபடத் தேவியோடுஇருந்தவன் எழில் ஆர், கச்சி ஏகம்பம்பொருந்தச் சென்று புடைபட்டு எழுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன்மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.
சொற்பிரிப்பு
கறைகொள் கண்டத்து எண்தோள் இறை முக்கணன்,மறைகொள் நாவினன், வானவர்க்கு ஆதியான்,உறையும் பூம்பொழில் சூழ் கச்சி ஏகம்பம்முறைமையால் சென்று முந்தித் தொழுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தைநெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.
சொற்பிரிப்பு
பொறிப் புலன்களைப் போக்கு அறுத்து, உள்ளத்தைநெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள்அறிப்புறும் அமுது ஆயவன் ஏகம்பம்குறிப்பினால், சென்று கூடித், தொழுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோடந்தி யாய்அன லாய்ப்புனல் வானமாய்புந்தி யாய்ப்புகுந் துள்ளம் நிறைந்தவெம்எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.
சொற்பிரிப்பு
சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடுஅந்தியாய், அனலாய்ப், புனல், வானமாய்ப்,புந்தியாய்ப், புகுந்து உள்ளம் நிறைந்த எம்எந்தை ஏகம்பம் ஏத்தித் தொழுமினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும்பாக்கி யம்மிலார் பாடு செலாதுறப்பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே.
சொற்பிரிப்பு
சாக்கியத்தொடு மற்றும் சமண்படும்பாக்கியம் இலார் பாடுசெலாது, உறப்பூக்கொள் சேவடியான் கச்சி ஏகம்பம்நாக்கொடு ஏத்தி நயந்து, தொழுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமைஆர்ப்ப தன்முன் னணிஅம ரர்க்கிறைகாப்ப தாய கடிபொழில் ஏகம்பம்சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே.
சொற்பிரிப்பு
மூப்பினோடு முனிவு உறுத்து எம் தமைஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறைகாப்பது ஆய கடி பொழில் ஏகம்பம்சேர்ப்பதாக, நாம் சென்று அடைந்து உய்துமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்சால நீயுறு மால்தவிர் நெஞ்சமேநீல மாமிடற் றண்ணலே கம்பனார்கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.
சொற்பிரிப்பு
ஆலும் மாமயில் சாயல் நல்லாரொடும்சால நீ உறு மால் தவிர், நெஞ்சமே!நீல மாமிடற்று அண்ணல் ஏகம்பனார்கோல மாமலர்ப் பாதமே கும்பிடே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்தியகைய னைக்கச்சி யேகம்பம் மேவியஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.
சொற்பிரிப்பு
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்மெய்யனைச், சுடர் வெண்மழு ஏந்தியகையனைக், கச்சி ஏகம்பம் மேவியஐயனைத், தொழுவார்க்கு இல்லை, அல்லலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையைநெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பந்தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.
சொற்பிரிப்பு
அரக்கன் தன் வலி உன்னிக், கயிலையைநெருக்கிச் சென்று எடுத்தான் முடி தோள் நெரித்துஇரக்க இன்இசை கேட்டவன் ஏகம்பம்,தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.