1
பண்டு செய்த பழவினை யின்பயன்கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமேவண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன்தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே.
சொற்பிரிப்பு
பண்டு செய்த பழவினையின் பயன்கண்டும் கண்டும் களித்தி காண், நெஞ்சமே!வண்டுலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன்தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.