திருமுறை 5 · 5.046 · 10

திருப்புகலூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
புகலூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணிபொன்னக் கன்ன சடைப்புக லூரரோமின்னக் கன்னவெண் டிங்களைப் பாம்புடன்என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே.
சொற்பிரிப்பு
துன்னக் கோவணச் சுண்ண வெண் நீறு அணி,பொன் நக்கன்ன சடைப், புகலூரரோ!மின் நக்கன்ன வெண் திங்களைப் பாம்புடன்என்னுக்கோ உடன் வைத்திட்டு இருப்பதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்புரைப்பி லாத பொழிற்புக லூரரைஉரைக்கு மாசொல்லி ஒள்வளை சோருமே.
சொற்பிரிப்பு
இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும்,நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்,புரைப்பு இலாத பொழில் புகலூரரைஉரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்ஓசொ லாய்மக ளேமுறை யோவென்றுபூசல் நாமிடு தும்புக லூரர்க்கே.
சொற்பிரிப்பு
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்!ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன-ரோ? சொலாய், மகளே! ‘முறையோ?’ என்றுபூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்தன்னை நேரொப் பிலாத தலைவனைப்புன்னைக் கானற் பொழில்புக லூரனைஎன்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே.
சொற்பிரிப்பு
மின்னின் நேர் இடையாள் உமை பங்கனைத்,தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனைப்,புன்னைக் காவல் பொழில் புகலூரனை,என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

விண்ணி னார்மதி சூடிய வேந்தனைஎண்ணி நாமங்கள் ஓதி எழுத்தஞ்சுங்கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனிற்புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே.
சொற்பிரிப்பு
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனைஎண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும்கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில்,புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டுபண்டு நான்மறை யோதிய பாடலன்தொண்ட ராகித் தொழுது மதிப்பவர்புண்ட ரீகத்து ளார்புக லூரரே.
சொற்பிரிப்பு
அண்ட வாணர் அமுது உண நஞ்சுண்டுபண்டு நால்மறை ஓதிய பாடலன்;தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர்புண்டரீகத்து உளார் புகலூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தத்து வந்தலை கண்டறி வாரிலைதத்து வந்தலை கண்டவர் கண்டிலர்தத்து வந்தலை நின்றவர்க் கல்லதுதத்து வன்னலன் தண்புக லூரனே.
சொற்பிரிப்பு
தத்துவம் தலை கண்டறிவார் இலைத்;தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்;தத்துவம் தலை நின்றவர்க்கு அல்லதுதத்துவன் அலன் தண் புகலூரனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்வருங்கை யானை மதகளி றஞ்சினைப்பொருங்கை யானைகண் டீர்புக லூரரே.
சொற்பிரிப்பு
பெருங்கை ஆகிப் பிளிறி வருவது ஓர்கருங்கையானைக் களிற்று உரி போர்த்தவர்;வரும் கை யானை மதகளிறு அஞ்சினைப்பொரும் கை யானை கண்டீர் புகலூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொன்னொத் தநிறத் தானும் பொருகடல்தன்னொத் தநிறத் தானும் அறிகிலாப்புன்னைத் தாது பொழிற்புக லூரரைஎன்னத் தாவென என்னிடர் தீருமே.
சொற்பிரிப்பு
பொன் ஒத்த நிறத்தானும் பொருகடல்தன்ஒத்த நிறத்தானும் அறிகிலாப்,புன்னைத் தாது பொழில், புகலூரரை,என் அத்தா! என என் இடர் தீருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மத்த னாய்மதி யாது மலைதனைஎத்தி னான்றிரள் தோள்முடி பத்திறஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்பொத்தி னான்புக லூரைத் தொழுமினே.
சொற்பிரிப்பு
மத்தனாய், மதியாது, மலைதனைஎத்தினான் திரள் தோள் முடி பத்து இறஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும்பொத்தினான் புகலூரைத் தொழுமினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.