திருமுறை 5 · 5.045 · 10

திருத்தோணிபுரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
சீர்காழி - 05-தோணிபுரம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்நீதி தான்சொல நீயெனக் காரெனுஞ்சோதி யார்தரு தோணி புரவர்க்குத்தாதி யாவன்நா னென்னுமென் தையலே.
சொற்பிரிப்பு
மாதி இயன்று மனைக்கு இரு! என்றக்கால்நீதி தான் சொல நீ எனக்கு ஆர்? எனும்சோதி ஆர் தரு தோணி புரவர்க்குத்தாதி ஆவன் நான் என்னும் என் தையலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்டமிக்க தையலை வெள்வளை கொள்வதுதொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்தக்க தன்று தமது பெருமைக்கே.
சொற்பிரிப்பு
நக்கம் வந்து பலி! இடு என்றார்க்கு, இட்டம்மிக்க தையலை வெள்வளை கொள்வதுதொக்க நீர் வயல் தோணி புரவர்க்குத்தக்கது அன்று தமது பெருமைக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கெண்டை போல்நய னத்திம வான்மகள்வண்டு வார்குழ லாளுட னாகவேதுண்ட வான்பிறைத் தோணி புரவரைக்கண்டு காமுறு கின்றனள் கன்னியே.
சொற்பிரிப்பு
கெண்டை போல் நயனத்து இமவான் மகள்வண்டு வார்குழலாள் உடன் ஆகவே,துண்ட வான்பிறைத் தோணிபுரவரைக்கண்டு காமுறுகின்றனள், கன்னியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடைமேல ளாவது கண்டனள் விண்ணுறச்சோலை யார்தரு தோணி புரவர்க்குச்சால நல்லளா கின்றனள் தையலே.
சொற்பிரிப்பு
பாலை யாழ் மொழியாள் அவள் தாழ்சடைமேலள் ஆவது கண்டனள்; விண் உறச்சோலை ஆர் தரு தோணி புரவர்க்குச்சால நல்லள் ஆகின்றனள் தையலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வதுசுண்ண மாடிய தோணி புரத்துறைஅண்ண லாருக்குச் சால அழகிதே.
சொற்பிரிப்பு
பண்ணின் நேர்மொழி யாள்,பலி இட்டஇப்பெண்ணை, மால்கொடு பெய்வளை கொள்வது,சுண்ணம்ஆடிய தோணிபுரத்துஉறைஅண்ண லாருக்குச் சால அழகிதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

முல்லை வெண்ணகை மொய்குழ லாயுனக்கல்ல னாவ தறிந்திலை நீகனித்தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கேநல்லை யாயிடு கின்றனை நங்கையே.
சொற்பிரிப்பு
முல்லை வெண்நகை மொய்குழ லாய்!உனக்குஅல்லன்ஆவது அறிந்திலை, நீ;கனித்தொல்லை ஆர்பொழில் தோணி புரவர்க்கேநல்லை ஆயிடு கின்றனை - நங்கையே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஒன்று தானறி யாருல கத்தவர்நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்துன்று வார்பொழில் தோணி புரவர்தங்கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே.
சொற்பிரிப்பு
ஒன்று தான்அறி யார்,உல கத்தவர்;நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்புஇலர்;துன்று வார்பொழில் தோணி புரவர்தம்கொன்றை சூடும் குறிப்புஅது ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலைஉறைவ தீமம் உடலிலோர் பெண்கொடிதுறைக ளார்கடல் தோணி புரத்துறைஇறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே.
சொற்பிரிப்பு
உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை;உறைவதுஈமம் உடலில்ஓர் பெண்கொடி;துறைகள்ஆர்கடல் தோணி புரத்துறைஇறைவ னார்க்குஇவள் என்கண்டுஅன்புஆவதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மாக யானை மருப்பேர் முலையினர்போக யானு மவள்புக்க தேபுகத்தோகை சேர்தரு தோணி புரவர்க்கேஆக யானு மவர்க்கினி யாளதே.
சொற்பிரிப்பு
மாக யானை மருப்புஏர் முலையினர்போக, யானும் அவள்புக்க தேபுகத்,தோகை சேர்தரு தோணி புரவர்க்கேஆக, யானும் அவர்க்கு-இனி ஆள்அதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இட்ட மாயின செய்வாளென் பெண்கொடிகட்டம் பேசிய காரரக் கன்றனைத்துட்ட டக்கிய தோணி புரத்துறைஅட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே.
சொற்பிரிப்பு
இட்டம்ஆயின செய்வாள்,என் பெண்கொடி-கட்டம் பேசிய கார்அரக் கன்தனைத்துட்டுஅ டக்கிய தோணி புரத்துஉறைஅட்ட மூர்த்திக்கு அன்புஅது ஆகியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.