திருமுறை 5 · 5.042 · 10

திருவேட்களம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
வேட்களம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நன்று நாடொறும் நம்வினை போயறும்என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறைதுன்று பொற்சடை யானைத் தொழுமினே.
சொற்பிரிப்பு
நன்று நாள்தொறும் நம்வினை போய் அறும்;என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்;சென்று, நீர், திரு வேட்களத்துள் உறைதுன்று பொற்சடையானைத் தொழுமினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்விருப்பன் மேவிய வேட்களங் கைதொழுதிருப்ப னாகில் எனக்கிட ரில்லையே.
சொற்பிரிப்பு
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்;பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்;விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுதுஇருப்பன் ஆகில் எனக்கு இடர் இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வேட்க ளத்துறை வேதியன் எம்மிறைஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.
சொற்பிரிப்பு
வேட்களத்து உறை வேதியன், எம் இறை;ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர்;பூக்கள் கொண்டு அவன் பொன்அடி போற்றினால்காப்பர் நம்மைக் கறைமிடற்று அண்ணலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அல்ல லில்லை அருவினை தானில்லைமல்கு வெண்பிறை சூடு மணாளனார்செல்வ னார்திரு வேட்களங் கைதொழவல்ல ராகில் வழியது காண்மினே.
சொற்பிரிப்பு
அல்லல் இல்லை அருவினை தான் இல்லைமல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,செல்வனார், திரு வேட்களம் கைதொழவல்லர் ஆகில் வழி அது காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

துன்ப மில்லைத் துயரில்லை யாமினிநம்ப னாகிய நன்மணி கண்டனார்என்பொ னாருறை வேட்கள நன்னகர்இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.
சொற்பிரிப்பு
துன்பம் இல்லை துயர் இல்லையாம், இனிநம்பன் ஆகிய நல் மணிகண்டனார்,என் பொனார், உறை வேட்கள நன்நகர்இன்பன், சேவடி ஏத்தி இருப்பதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கட்டப் பட்டுக் கவலையில் வீழாதேபொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்பட்ட வல்வினை யாயின பாறுமே.
சொற்பிரிப்பு
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதேபொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர்,சிட்டனார் திரு வேட்களம் கைதொழப்,பட்ட வல்வினை ஆயின பாறுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வட்ட மென்முலை யாளுமை பங்கனார்எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழுதிட்ட மாகி யிருமட நெஞ்சமே.
சொற்பிரிப்பு
வட்ட மென்முலையாள் உமை பங்கனார்,எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்,சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுதுஇட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நட்ட மாடிய நம்பனை நாடொறும்இட்டத் தாலினி தாக நினைமினோவட்ட வார்முலை யாளுமை பங்கனார்சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.
சொற்பிரிப்பு
நட்டம் ஆடிய நம்பனை, நாள்தொறும்இட்டத்தால் இனிது ஆக நினைமினோ-வட்டவார் முலையாள் உமை பங்கனார்,சிட்டனார், திரு வேட்களம் தன்னையே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.
சொற்பிரிப்பு
வட்ட மாமதில் மூன்றுடை வல்அரண்சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர்குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்சிட்டர் போல், திரு வேட்களச் செல்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சேட னாருறை யுஞ்செழு மாமலைஓடி யாங்கெடுத் தான்முடி பத்திறவாட வூன்றி மலரடி வாங்கியவேட னாருறை வேட்களஞ் சேர்மினே.
சொற்பிரிப்பு
சேடனார் உறையும் செழு மாமலைஓடி ஆங்கு எடுத்தான் முடி பத்து இறவாட ஊன்றி மலர் அடி வாங்கியவேடனார் உறை வேட்களம் சேர்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.