திருமுறை 5 · 5.041 · 10

திருப்பைஞ்ஞீலி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பைஞ்ஞீலி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்சடையிற் கங்கை தரித்த சதுரரைஅடைய வல்லவர்க் கில்லை அவலமே.
சொற்பிரிப்பு
உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர்படைகொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;சடையின் கங்கை தரித்த சதுரரைஅடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மத்த மாமலர் சூடிய மைந்தனார்சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.
சொற்பிரிப்பு
மத்தம் மாமலர் சூடிய மைந்தனார்சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்;பத்தர் தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம்அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்கழுது துஞ்சிருட் காட்டகத் தாடலான்பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலிப் பரமனைத்தொழுது செல்பவர் தம்வினை தூளியே.
சொற்பிரிப்பு
விழுது சூலத்தன் வெண்மழுவாட் படைக்,கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான்;பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்தொழுது செல்பவர் தம் வினை தூளியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலேநின்ற சூழ லறிவரி யானிடஞ்சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்என்றும் மேவி யிருந்த அடிகளே.
சொற்பிரிப்பு
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலேநின்ற சூழல் அறிவு அரியான் இடம்சென்று பாரிடம் ஏத்து பைஞ்ஞீலியுள்என்றும் மேவி இருந்த அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்யாழின் பாட்டை யுகந்த அடிகளே.
சொற்பிரிப்பு
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார்,தாழச் செஞ்சடை மேல் பிறை வைத்தவர்தாழைத் தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;யாழின் பாட்டை உகந்த அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்அண்ட வாணன் அடியடைந் துய்ந்தனே.
சொற்பிரிப்பு
குண்டு பட்டுக் குறி அறியாச் சமண்மிண்டரோடு படுத்து, உய்யப் போந்து, நான்,கண்டம் கார், வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி, எம்அண்ட வாணன் அடி அடைந்து உய்ந்தனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வரிப்பை யாடர வாட்டி மதகரிஉரிப்பை மூடிய வுத்தம னாருறைதிருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்இருப்பர் வானவ ரோடினி தாகவே.
சொற்பிரிப்பு
வரிப்பை ஆடு அரவு ஆட்டி மதகரிஉரிப்பை மூடிய உத்தமனார் உறைதிருப்பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய்இருப்பர், வானவரோடு இனிது ஆகவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்பேடு மாணும் பிறரறி யாததோர்ஆடு நாகம் அசைத்த அடிகளே.
சொற்பிரிப்பு
கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல்பாடல் வண்டிசை கேட்கும் பைஞ்ஞீலியார்,பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்ஆடும் நாகம் அசைத்த அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்வாரு லாமுலை மங்கையோர் பங்கினன்தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
கார் உலாம் மலர்க் கொன்றை அம் தாரினான்,வார் உலாம் முலை மங்கை ஓர் பங்கினன்,தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்ஆர்கிலா அமுதை, அடைந்து உய்ம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தருக்கிச் சென்று தடவரை பற்றலும்நெருக்கி யூன்ற நினைந்து சிவனையேஅரக்கன் பாட அருளுமெம் மானிடம்இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.
சொற்பிரிப்பு
தருக்கிச் சென்று தடவரை பற்றலும்நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையேஅரக்கன் பாட அருளும் எம்மான் இடம்,இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.