திருமுறை 5 · 5.040 · 10

திருக்கழிப்பாலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கழிப்பாலை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்அண்ண லேயறி வானிவள் தன்மையே.
சொற்பிரிப்பு
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;கண்உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்அண்ணலே அறிவான், இவள் தன்மையே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மருந்து வானவர் உய்யநஞ் சுண்டுகந்திருந்த வன்கழிப் பாலையுள் எம்பிரான்திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.
சொற்பிரிப்பு
மருந்து வானவர் உய்ய நஞ்சுண்டு உகந்துஇருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான்,திருந்து சேவடி சிந்தையுள் வைத்து, இவள்,பரிந்துரைக்கிலும் என் சொல் பழிக்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மழலை தான்வரச் சொற்றெரி கின்றிலள்குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோஅழக னேகழிப் பாலையெம் மண்ணலேஇகழ்வ தோயெனை ஏன்றுகொ ளென்னுமே.
சொற்பிரிப்பு
மழலை தான் வரச் சொல் தெரிகின்றிலள்;குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ;"அழகனே! கழிப்பாலை எம் அண்ணலே!இகழ்வதோ, எனை? ஏன்றுகொள்!” என்னுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செய்ய மேனிவெண் ணீறணி வான்றனைமைய லாகி மதிக்கில ளாரையுங்கைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம்ஐய னேஅறி வானிவள் தன்மையே.
சொற்பிரிப்பு
செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனைமையல் ஆகி மதிக்கிலள், ஆரையும்;கைகொள் வெண்மழுவன், கழிப்பாலை எம்ஐயனே அறிவான், இவள் தன்மையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கருத்த னைக்கழிப் பாலையுள் மேவியஒருத்த னையுமை யாளொரு பங்கனைஅருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்றொருத்தி யாருளம் ஊசல தாடுமே.
சொற்பிரிப்பு
கருத்தனைக், கழிப்பாலையுள் மேவியஒருத்தனை, உமையாள் ஒரு பங்கனை,அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்றுஒருத்தியார் உளம் ஊசலது ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கங்கை யைச்சடை வைத்து மலைமகள்நங்கை யையுட னேவைத்த நாதனார்திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே.
சொற்பிரிப்பு
கங்கையைச் சடை வைத்து மலைமகள்நங்கையை உடனே வைத்த நாதனார்,திங்கள் சூடித் திருக்கழிப்பாலையான்,இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஐய னேஅழ கேஅன லேந்தியகைய னேகறை சேர்தரு கண்டனேமையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்ஐய னேவிதி யேஅரு ளென்னுமே.
சொற்பிரிப்பு
"ஐயனே! அழகே! அனல் ஏந்தியகையனே! கறை சேர்தரு கண்டனே!மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்ஐயனே, விதியே, அருள்!” என்னுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பத்தர் கட்கமு தாய பரத்தினைமுத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியைஅத்த னைஅணி யார்கழிப் பாலையெஞ்சித்த னைச்சென்று சேருமா செப்புமே.
சொற்பிரிப்பு
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை,முத்தனை, முடிவு ஒன்று இலா மூர்த்தியை,அத்தனை, அணி ஆர் கழிப்பாலை எம்சித்தனைச், சென்று சேருமா செப்புமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

பொன்செய் மாமுடி வாளரக் கன்றலைஅஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன்என்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான்துஞ்சும் போதுந் துணையென லாகுமே.
சொற்பிரிப்பு
பொன்செய் மாமுடி வாள் அரக்கன் தலைஅஞ்சும் நான்கும் ஒன்று இறுத்தான் அவன்என் செயான்? கழிப்பாலையுள் எம்பிரான்துஞ்சும் போதும் துணை எனல் ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.