1
கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளைஉள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்வள்ளல் மாமயி லாடு துறையுறைவெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.
சொற்பிரிப்பு
கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல்வளைஉள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர்-வள்ளல் மா மயிலாடுதுறை உறைவெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.