திருமுறை 5 · 5.038 · 10

திருக்கடவூர்மயானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கடவூர் மயானம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

குழைகொள் காதினர் கோவண ஆடையர்உழையர் தாங்கட வூரின் மயானத்தார்பழைய தம்மடி யார்செயும் பாவமும்பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.
சொற்பிரிப்பு
குழைகொள் காதினர் கோவண ஆடையர்,உழையர் தாம் கடவூரின் மயானத்தார்;பழைய தம் அடியார் செய்யும் பாவமும்பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உன்னி வானவர் ஓதிய சிந்தையிற்கன்னல் தேன்கட வூரின் மயானத்தார்தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்பின்னை என்னார் பெருமா னடிகளே.
சொற்பிரிப்பு
உன்னி வானவர் ஓதிய சிந்தையில்கன்னல், தேன் கடவூரின் மயானத்தார்;தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம்பின்னை என்னார் பெருமான் அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சூல மேந்துவர் தோலுடை ஆடையர்ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்கால காலர் கடவூர் மயானத்தார்மாலை மார்பர் பெருமா னடிகளே.
சொற்பிரிப்பு
சூலம் ஏந்துவர் தோல் உடை ஆடையர்,ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர்,கால காலர் கடவூர் மயானத்தார்;மாலை மார்பர் பெருமான் அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்மறவ னார்கட வூரின் மயானத்தார்அறவ னாரடி யாரடி யார்தங்கள்பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே.
சொற்பிரிப்பு
இறைவனார், இமையோர் தொழு பைங்கழல்மறவனார் கடவூரின் மயானத்தார்;அறவனார், அடியார் அடியார் தங்கள்பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கத்து காளி கதந்தணி வித்தவர்மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொருபித்தர் காணும் பெருமா னடிகளே.
சொற்பிரிப்பு
கத்து காளி கதம் தணிவித்தவர்,மத்தர் தாம் கடவூரின் மயானத்தார்;ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார், ஒருபித்தர் காணும் பெருமான் அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்கரியர் தாங்கட வூரின் மயானத்தார்அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும்பெரியர் காணும் பெருமா னடிகளே.
சொற்பிரிப்பு
எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்,கரியர் தாம் கடவூரின் மயானத்தார்;அரியர், அண்டத்துளோர் அயன் மாலுக்கும்;பெரியர் காணும் பெருமான் அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அணங்கு பாகத்தர் ஆரண நான்மறைகணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்பிணங்கொள் காடர் பெருமா னடிகளே.
சொற்பிரிப்பு
அணங்கு பாகத்தர் ஆரண நால்மறைகணங்கள் சேர் கடவூரின் மயானத்தார்;வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்குறும்பிணம் கொள் காடர் பெருமான் அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அரவு கையினர் ஆதி புராணனார்மரவு சேர்கட வூரின் மயானத்தார்பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வர்பிரமன் மாற்கும் பெருமா னடிகளே.
சொற்பிரிப்பு
அரவு கையினர் ஆதி புராணனார்மரவு சேர் கடவூரின் மயானத்தார்;பரவுவார் இடர் தீர்ப்பர், பணிகொள்வார்,பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

10 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 10-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை