திருமுறை 5 · 5.037 · 11

திருக்கடவூர்வீரட்டம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கடவூர் வீரட்டம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மலைக்கொ ளானை மயக்கிய வல்வினைநிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமேகொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்கலைக்கை யானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
மலைக்கொள் ஆனை மயக்கிய வல்வினைநிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே!கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால்,கலைக்கை யானை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்உள்ள வாறெனை உள்புகு மானையார்கொள்ள மாகிய கோயிலு ளானையார்கள்ள வானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
வெள்ளி மால்வரை போல்வது ஓர் ஆனையார்;உள்ளவாறு எனை உள்புகும் ஆனையார்;கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்;கள்ள ஆனை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஞான மாகிய நன்குண ரானையார்ஊனை வேவ வுருக்கிய ஆனையார்வேன லானை யுரித்துமை அஞ்சவேகான லானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
ஞானம் ஆகிய நன்குணர் ஆனையார்;ஊனை வேவ உருக்கிய ஆனையார்;வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே,கான ஆனை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆல முண்டழ காயதோ ரானையார்நீல மேனி நெடும்பளிங் கானையார்கோல மாய கொழுஞ்சுட ரானையார்கால வானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார்;நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார்;கோலமாய கொழுஞ்சுடர் ஆனையார்;கால ஆனை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அளித்த ஆனஞ்சு மாடிய வானையார்வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்எளித்த வேழத்தை எள்குவித் தானையார்களித்த வானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்;வெளுத்த நீள்கொடி ஏறு உடை ஆனையார்;எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்;களித்த ஆனை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

விடுத்த மால்வரை விண்ணுற வானையார்தொடுத்த மால்வரை தூயதோ ரானையார்கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்கடுத்த வானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
விடுத்த மால்வரை விண் உற ஆனையார்;தொடுத்த மால்வரை தூயது ஓர் ஆனையார்;கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்;கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மண்ணு ளாரை மயக்குறு மானையார்எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்விண்ணு ளார்பல ரும்மறி யானையார்கண்ணு ளானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
மண்ணுளாரை மயக்குறும் ஆனையார்;எண்ணுளார் பலர் ஏத்திடும் ஆனையார்;விண்ணுளார் பலரும் அறி ஆனையார்;கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்கனைக்கு மானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
சினக்கும் செம்பவளத் திரள் ஆனையார்;மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்;அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார்;கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வேத மாகிய வெஞ்சுட ரானையார்நீதி யானில னாகிய வானையார்ஓதி யூழி தெரிந்துண ரானையார்காத லானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
வேதம் ஆகிய வெஞ்சுடர் ஆனையார்;நீதியால் நிலன் ஆகிய ஆனையார்;ஓதி ஊழி தெரிந்துணர் ஆனையார்காதல் ஆனை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நீண்ட மாலொடு நான்முகன் றானுமாய்க்காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்மாண்ட வாரழ லாகிய வானையார்காண்ட லானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க்,காண்டும் என்று புக்கார்கள் இருவரும்மாண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அடுத்து வந்த இலங்கையர் மன்னனைஎடுத்த தோள்கள் இறநெரித் தானையார்கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.
சொற்பிரிப்பு
அடுத்து வந்த இலங்கையர் மன்னனைஎடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார்;கடுத்த காலனைக்காய்ந்ததோர் ஆனையார்கடுக்கை யானைக் கண்டீர் கடவூரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.