1
கான றாத கடிபொழில் வண்டினந்தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்ஊன றாததோர் வெண்டலை யிற்பலிதான றாததோர் கொள்கையன் காண்மினே.
சொற்பிரிப்பு
கான் அறாத கடிபொழில் வண்டினம்தேன் அறாத திருச்செம்பொன் பள்ளியான்,ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி-தான் அறாதது ஓர் கொள்கையன் காண்மினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.