1
அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமைஉருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும்பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே.
சொற்பிரிப்பு
அருவனாய் ,அத்தி ஈர் உரி போர்த்து உமைஉருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும்,பருவரால் வயல் சூழ்ந்த பழனத்தான்,திருவினால் திரு வேண்டும், இத் தேவர்க்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.