1
கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.
சொற்பிரிப்பு
கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலத்தான்,புல்லியார் புரம் மூன்று எரி செய்தவன்,நெல்லியான், நிலையான நெய்த்தானனைச்சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.